மீண்டுவரும் கட்டுமானத் துறை

மீண்டுவரும் கட்டுமானத் துறை

2 mins read

முடுக்கிவிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பணிகள்; சம்பளம் 20%-30% அதிகரிப்பு

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் நேர்ந்த கடி­ன­மான கால­கட்­டத்­தைக் கடந்து இங்­குள்ள கட்­டு­மா­னத் துறை நிறு­வ­னங்­கள் மீண்­டும் விறு­வி­றுப்­பா­கச் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளன.

ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்கை அதி­க­ரித்­த­து­டன் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளங்­களும் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

சிறப்­புத் திறன்­கள் ஏது­மில்­லாத, பொது­வான கட்­டு­மான ஊழி­யர்­கள் இப்­போது நாட்­சம்­ப­ள­மாக 23 வெள்ளி ஈட்ட இய­லு­மென்று கூறப்­ப­டு­கிறது. கிரு­மிப்­ப­ர­வ­லுக்குமுன் இந்­தத் தொகை 18 வெள்­ளி­யாக இருந்­தது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு­கொண்ட சில கட்­டு­மான நிறு­வனங்­கள், தங்­கள் ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்­தைச் சரா­ச­ரி­யாக 20% முதல் 30% வரை உயர்த்­தி­யுள்­ள­தா­கத் தெரி­வித்­தன. கூடு­த­லான வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்தி இருப்­ப­தா­க­வும் அவை கூறின.

வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட இரண்­டாம் காலாண்­டுக்­கான சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் ஆய்­வில், கட்­டு­மா­னத் துறை­யில் 25,200 பேர் புதி­தாக வேலைக்­குச் சேர்ந்­த­தா­கத் தெரி­வித்­தது. முதல் காலாண்­டைக் காட்டிலும் இது 116% அதி­கம்.

"சென்ற ஆண்­டின் இறு­திக் காலாண்டு, இந்த ஆண்­டின் முதல் காலாண்டு ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில், 2022ன் இரண்­டாம் காலாண்­டில் கட்­டு­மா­னத் துறை­யில் வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தத் துறை­யில் வேலை அனு­மதிச்சீட்டு வைத்­தி­ருக்­கும் ஊழி­யர் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலைக்கு ஈடாக உள்­ளது," என்று மனி­த­வ­ள அமைச்­சர் டான் சீ லெங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு எழுத்­து­பூர்­வ­மாக அளித்த பதி­லில் அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

கட்­டு­மா­னத் துறை, கடி­ன­மான கால­கட்­டத்­தின் இறு­தியை நெருங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவே நிறு­வனங்­கள் கரு­து­கின்­றன.

இருப்­பி­னும், பண­வீக்­கம், விநி­யோ­கச் சிக்­கல்­கள் ஆகி­ய­வற்­றின் எதி­ரொ­லி­யாக மூலப்­பொ­ருள்­களின் விலை கூடி­யதை அவை சுட்­டிக்காட்டின. எடுத்­துக்­காட்­டாக, கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பு இ­ருந்­த­தை­விட அலு­மி­னி­யத்­தின் விலை இப்­போது இரு­ம­டங்­காகி உள்­ளது. எஃகின் விலை­யும் கூடிவிட்டது.

எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தால், வெளி­நா­டு­களில் இருந்து புதிய ஊழி­யர்­க­ளைக் கொண்­டு­வ­ரு­வது எளி­தா­கி­ இருப்­ப­தாக நிறு­வ­னங்­கள் கூறின. முன்பு புதிய ஊழியர் ஒருவரை அழைத்துவர $2,000 செலவான நிலையில், இப்போது அது 600 வெள்ளியாகக் குறைந்துள்ளது.

இருப்­பி­னும் புதி­தாக வரு­வோ­ருக்கு அனு­ப­வம் அறவே இல்லை அல்­லது மிகக் குறைவு. அவர்­களுக்கு முறை­யான பயிற்சி தரப்­பட வேண்­டும் என்­பதை நிறு­வனங்­கள் சுட்­டின.

நல்ல முன்­னேற்­றம் காணப்­பட்­டா­லும் கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­திய நிலைக்கு இன்­னும் மீட்சி அடை­ய­வில்லை என்று சில நிறு­வனங்­கள் தெரிவித்தன.