40 நிமிடங்களில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய கோத்தபாய

40 நிமிடங்களில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய கோத்தபாய

1 mins read
8414fd81-b884-40fe-9ef4-48540b38c42e
-

தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே (வலமிருந்து 2வது), இப்போது தற்காலிகமாகத் தாய்லாந்தில் தஞ்சமடைந்து உள்ளார். நான்கு வாரகாலம் சிங்கப்பூரில் தங்கியிருந்த இவர், தம் மனைவியுடன் நேற்று முன்தினம் மாலையில் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலமாக தாய்லாந்து புறப்பட்டார். இரவு 8 மணிக்கு பேங்காக் டான் முவேங் விமான நிலையத்தில் தரையிறங்கிய இருவரும் ஏறத்தாழ 40 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறி, கருநிற காரில் ஏறிச் சென்றனர். தாய்லாந்தில் கோத்தபாய புகலிடம் கோரமாட்டார் எனத் தெரிகிறது. படம்: ஏஎஃப்பி