அடுத்த மாதம் முதல் வளர்ப்புப் பெற்றோர் உதவித்தொகை உயர்வு

சிங்­கப்­பூ­ரில் அடுத்த மாதம் முதல் வளர்ப்­புப் பெற்­றோ­ருக்­கான நிதி ஆத­ரவு அதி­க­ரிக்­கப்­ப­டு­கிறது. மேலும் அதி­க­மா­னோர் வளர்ப்­புப் பெற்­றோ­ராக மாற ஊக்­கு­விக்­கும் அர­சாங்­கத்­தின் முயற்­சி­களில் இது­வும் ஒன்று.

பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொள்­வோ­ருக்­கான மாதாந்­திர வளர்ப்பு உத­வித்­தொகை தற்­போது 936 வெள்­ளி­யாக உள்­ளது. இது, செப்­டம்­பர் 1 முதல் 1,100 வெள்­ளி­யாக உய­ரும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று கூறி­னார்.

அதே­போல சிறப்­புத் தேவை­யு­டைய பிள்­ளை­களை வளர்ப்­போ­ருக்­கான மாதாந்­திர உத­வித்­தொகை 1,114 வெள்­ளி­யி­லி­ருந்து 1,500ஆக உய­ரும்.

சிகிச்சை மற்­றும் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க அவர்­க­ளுக்கு இந்­தக் கூடு­தல் தொகை கைகொ­டுக்­கும். உத­வித்­தொகை கூடு­த­வ­தால் அமைச்­சின் செலவு ஆண்­டுக்கு $1.5 மில்­லி­யன் கூடும் என்­றார் திரு மச­கோஸ்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது 550 வளர்ப்­புப் பிள்­ளை­கள் உள்­ள­னர். இவர்­களில் 20 விழுக்­காட்­டி­னர் சிறப்­புத் தேவை உடைய பிள்­ளை­கள்.

உத­வித்­தொ­கையை உயர்த்­து­வது என்­பது வளர்ப்­புக் குடும்­பங்­

க­ளை­யும் வளர்ப்­புப் பிள்­ளை­க­ளை­யும் ஆத­ரிக்க தமது அமைச்சு வகுத்­தி­ருக்­கும் விரி­வான திட்­டத்­தின் ஒரு பகுதி என்­றும் அவர் கூறி­னார்.

லெங்­கோக் பாரு­வில் உள்ள எனே­பி­ளிங் வில்­லேஜ் கூடத்­தில் நடை­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்­றில் நேர­டி­யா­கப் பங்­கேற்று திரு மச­கோஸ் பேசி­னார். கிட்­டத்­தட்ட 170 பேர் இதில் பங்­கேற்­ற­னர்.

"குழந்­தைப் பரா­ம­ரிப்பு, ஆரம்­ப­கா­லப் பரா­ம­ரிப்பு மற்­றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் போன்­ற­வற்­றுக்­காக வளர்ப்­புக் குடும்­பங்­கள் உத­வி­பெற்று வரு­கின்­றன. குழந்­தைப் பரா­ம­ரிப்பு விடுப்­பும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது. இவற்­று­டன், சமூக ஊழி­யர்­க­ளின் ஆத­ர­வும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கிறது.

"வளர்ப்­புப் பெற்­றோர் தாங்­கள் வளர்க்­கும் பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிக்க மித­மிஞ்­சிய ஆத­ரவை வழங்­கு­கி­றார்­கள்.

"2020ஆம் ஆண்டு 564 ஆக இருந்த வளர்ப்­புக் குடும்­பங்­கள் கடந்த ஆண்டு 595 ஆக அதி­க­ரித்­தன. இது மகிழ்ச்­சிக்­கு­ரிய அம்­சம். மேலும் அதி­க­மான பிள்­ளை­கள் குடும்ப அர­வ­ணைப்­பு­டன் மகிழ்ச்­சி­யாக வாழ வேண்­டும் என அர­சாங்­கம் விரும்­பு­கிறது," என்­றார் அமைச்­சர் மச­கோஸ்.

இயன் மருத்­து­வ­ரான இம்­ரான் முக­மது காமி­சும் அவ­ரது மனைவி ஃபைஸா முகம்­ம­து­வும் மதி இறுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட நான்கு வயது குழந்தை ஒன்றை வளர்க்­கி­றார்­கள்.

கூடு­தல் உத­வித்­தொகை பிள்­ளை­களை வளர்க்க ஆகும் செல­வு­க­ளைக் குறைக்க உத­வும் என்று திரு­மதி ஃபைஸா கூறி­னார்.

அதே­போல திரு சிவச்­சந்­தி­ரன் டி. பழ­னிச்­சாமி, 62, அவ­ரது மனைவி அனிதா என். சிவ­தா­சன், 60, ஆகி­யோர் 2003ஆம் ஆண்­டி­லி­ருந்து 20 குழந்­தை­களை வளர்த்து வந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­களில், குறை­பா­டு­டைய 12 வயது மற்­றும் 18 வயது ஆன இரு பிள்­ளை­களை தற்­போது வளர்த்து வரு­கி­றார்­கள். இந்­தத் தம்­ப­திக்கு 25, 28 வய­து­களில் சொந்த மகன், மகள் உண்டு.

மருத்­துவ சிகிச்சை அல்­லது மருத்­துவ ஆலோ­ச­னைக்­காக பிள்­ளை­களை டாக்சி மூலம் அழைத்­துச் செல்­வ­தால், இப்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள கூடு­தல் உத­வித்­தொகை இந்­தப் போக்­கு­வ­ரத்­துச் செல­வைச் சமா­ளிக்க பெரி­தும் உத­வும் என்று திரு­மதி அனிதா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!