கத்தியால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழக்கக்கூடும்

புகழ்­பெற்ற எழுத்­தா­ளர் சல்­மான் ருஷ்டி, 75, (வலது படம்) கத்­தி­யால் குத்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவ­ரது ஒரு கண்­ணில் பார்வை இழப்பு ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும் கத்­திக்­குத்து காயத்­தால் அவ­ரது கல்­லீ­ரல் சேத­ம­டைந்து இருப்­ப­தா­க­வும் அவ­ரது முக­வர் கூறி­னார்.

திரு ஆண்ட்ரூ வெய்லீ எனப்­படும் அவர் இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

“நல்ல செய்­தி­யாக இல்லை. திரு சல்­மான் ருஷ்­டி­யின் ஒரு கண்­ணில் பார்வை இழப்பு ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ளது. அவ­ரது கையில் உள்ள நரம்­பு­கள் துண்­டிக்­கப்­படும் நிலை உள்­ளது. ேமலும், அவ­ரது கல்­லீ­ர­லும் சேத­ம­டைந்து உள்­ளது,” என்று அவர் அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உள்­ளார். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்கு செயற்­கைச் சுவா­சம் அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு ஆண்ட்ரு குறிப்­பிட்­டார்.

நியூ­யார்க் நக­ரில் கருத்­த­ரங்கு ஒன்­றில் பங்­கேற்ற திரு ருஷ்­டியை ஆட­வர் ஒரு­வர் கத்­தி­யால் பல­முறை குத்­தி­னார். அத­னால் அவ­ரது கழுத்­தி­லும் உட­லின் பல இடங்­க­ளி­லும் கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன.

இதற்­கி­டையே, தாக்­கிய ஆட­வ­ரின் அடை­யா­ளங்­களை காவல்­துறை வெளி­யிட்­டுள்­ளது. ஹாடி மாட்­டார் எனப்­படும் அந்த 24 வயது ஆட­வர் நியூ ஜெர்ஸி மாநி­லத்­தின் ஃபேர்வியூ பகு­தி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க நுழை­வுச் சீட்டை அவர் வாங்­கி­னார் என்­றும் நியூ­யார்க் மாநில காவல்­துறை கூறி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!