எதிரெதிர் துருவங்களாக விளங்கும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய நிகழ்வு வரும் நவம்பரில் நடக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான ஆலோசனைகளில் இரு நாட்டின் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்கிழக்காசியாவில் நவம்பர் மாதம் நடைபெறக்கூடிய இரண்டு வட்டார உச்சநிலைக் கூட்டங்களில் அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசக்கூடும் என்று ஒரு தகவல் கூறுகிறது.
இது குறித்து திரு பைடனின் இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான தலைமை ஆலோசகர் திரு கர்ட் கேம்பெல் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.
"இரு தலைவர்களும் அண்மையில் தொலைபேசி வாயிலாகப் பேசினார்கள். நேருக்கு நேர் சந்திப்பதற்கான சாத்தியம் குறித்து இருவரும் பேசினார்கள். இது உறுதியான தகவல்.
"அவர்களின் நேரடிச் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டின் குழுவினரும் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயல்வார்கள்," என்று அவர் கூறினார்.
ஜூலை மாதம் இரு அதிபர்களும் பேசிக்கொண்டதைக் குறிப்பிட்டு அவர் இந்தத் தகவல்
களைக் கூறினார்.
இருப்பினும் இருவரும் சந்திக்க இருப்பது குறித்து அவர் விரிவாக எதனையும் தெரிவிக்கவில்லை.
"இருவரும் சந்திக்கும் இடம், நேரம் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது எங்களிடம் இல்லை," என்றார் திரு கேம்பெல்.
திரு ஸி நவம்பர் மாதம் தென்கிழக்காசியாவுக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சீன நாட்டு அதிகாரிகள் செய்துவருவதாகவும் திரு பைடனை அப்போது திரு ஸி சந்திக்கக்கூடும் என்றும் 'த வால் ஸ்திரீட் ஜர்னல்' சஞ்சிகை நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தது.
பாலி தீவில் நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சநிலைக் கூட்டத்தில் திரு ஸி கலந்துகொள்வார் என அந்த சஞ்சிகை கூறி இருந்தது.
அதனைத் தொடர்ந்து பேங்காக்கில் இரு நாள்கள் நடைபெற உள்ள ஏபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டிலும் அவர் பங்கேற்கக் கூடும் என்றும் அது தெரிவித்தது.
திரு ஸியின் பயண ஏற்பாடு
களைக் கவனித்துவரும் அதி
காரிகளை மேற்கோள் காட்டி அது அந்தச் செய்தியை வெளியிட்டு இருந்தது.
திரு ஸியின் பயணம் அவர் மூன்றாம் முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நிகழ உள்ளது.
தாம் மீண்டும் சீனாவின் அதி பராகத் தேர்ந்து எடுக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.
மேலும், கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் அவர் சீனாவுக்கு வெளியே மேற்கொள்ள இருக்கும் முதல் பயணமாக இது அமையும். திரு ஸி ஆகக் கடைசியாக 2020 ஜனவரியில் மியன்மார் சென்றிருந்தார்.
தைவானுக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்றதைத் தொடர்ந்து சீனாவின் கடும் எச்சரிக்கை வெளியான நிலையில் அமெரிக்க-சீன அதிபர்களின் நேரடி சந்திப்பு நிகழ இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தைவான் தொடர்பான பதற்றத்துக்கு இடையே பைடன்-ஸி சந்திப்பு நிகழும் சாத்தியம்

