'செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்ட நிலையில் சல்மான் ருஷ்டியால் பேச முடிகிறது'

'செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்ட நிலையில் சல்மான் ருஷ்டியால் பேச முடிகிறது'

2 mins read
8d7d12cd-4a58-44d9-972e-db253afcac27
-

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டிருப்பதாக அவர் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவ­ரால் மீண்­டும் பேச முடி­கிறது என்­றும் தெரி­விக்­கப்­படுகிறது.

அண்­மை­யில் நியூ­யார்க்­கில் உள்ள ஒரு லாப நோக்­க­மற்ற கல்வி நிலை­யத்­தில் நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் ருஷ்டி உரை­யாற்­று­வ­தாக இருந்­தது. உரை­யாற்ற அவர் தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்­த­போது ஆட­வர் ஒரு­வர் அவ­ரைக் கத்­தி­யால் பத்து முறை குத்­திக் காயப்­ப­டுத்­தி­னார். தாக்­கு­தல்­கா­ரரை அங்­கி­ருந்த சிலர் உடனே மடக்­கிப் பிடித்­த­னர்.

நியூ ஜெர்­சி­யைச் சேர்ந்த 24 வயது ஹாடி மாட்­டார் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அவர் மறுத்­தார்.

ருஷ்­டியை அவர் திட்­ட­மிட்­டுத் தாக்­கி­ய­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் கூறு­கின்­ற­னர். கருத்­த­ரங்கு நடை­பெற்ற இடத்­துக்கு அவர் பேருந்­தில் சென்­ற­தா­க­வும் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்ள நுழை­வுச்­சீட்டு வாங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. மாட்­ட­ருக்­குப் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. அவர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று அவர் மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­

னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு ருஷ்டி எழு­திய நூல் ஒன்று இஸ்­லா­மிய சம­யத்­தைத் தூற்­று­வ­தா­கக் கூறி அவ­ருக்குக் கொலை

மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில், ருஷ்டி தாக்­கப்­பட்­ட­தைக் கொண்­டா­டும் வகை­யில் ஈரா­னிய செய்­தித்­தாள் ஒன்­றின் முதல் பக்­கத்­தில் செய்தி பிர­சு­ர­மா­னது. ருஷ்­டிக்­குத் தகுந்த தண்­டனை கிடைத்­தி­ருப்­ப­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ருஷ்­டிக்கு அடுத்து அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப்புக்கும் அந்­நாட்­டின் முன்­னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ர் மைக் பாம்­பி­யோ­வுக்கும் தண்­டனை கிட்­டும் என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சல்மான் ருஷ்டியைக் கத்தியால் பலமுறை குத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட ஹாடி மாட்டார். படம்: இணையம்