25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாவதற்கு இந்தியா இலக்கு: மோடி

25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாவதற்கு இந்தியா இலக்கு: மோடி

2 mins read
093a610d-7407-46d0-9e31-d4537f12f2d6
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இடம்பெற்ற பங்கேற்பாளர்களைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (நடுவில்). படம்: ஏஎஃப்பி -

இந்­தியா அடுத்த 25 ஆண்­டு­களில் வளர்ச்­சி­அடைந்த நாடாக இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் 75வது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு தலைநகர் புதுடெல்­லி­யின் செங்­கோட்­டை­யில் நேற்று நாட்டு மக்­க­ளி­டம் உரை­யாற்­றி­ய­போது அவர் இவ்­வாறு கூறி­னார்.

இளை­யர்­கள் "பெரி­தாக இலக்கு நிர்­ண­யித்து நாட்­டின் வளர்ச்­சிக்­காக தங்­க­ளால் ஆன­வற்றை தர வேண்­டும் என்று திரு மோடி கேட்டுக்­கொண்­டார்.

இந்தி மொழி­யில் ஒன்றே கால் மணி நேரம் உரை­யாற்­றிய அவர், "அடுத்த 25 ஆண்­டு­களில் வளர்ச்­சி­ய­டைந்த நாடாக இந்­தி­யாவை நாம் உரு­மாற்ற வேண்­டும், அது­வும் நம் வாழ்­நா­ளில். இது ஒரு பெரிய தீர்­மா­னம்­தான். நம்­மி­டம் உள்ள சக்­தி­யைக் கொண்டு இந்த இலக்கை நோக்கி நாம் செயல்­பட வேண்­டும்," என்று வலி­யுறுத்­தி­னார்.

உல­கின் ஆறா­வது பெரிய பொரு­ளி­யல் நாடா­கத் திக­ழும் இந்­தியா, 2023 மார்ச் மாதம் முடி­வ­டை­யும் நடப்பு நிதி­யாண்­டில் 7 விழுக்­காட்­டிற்கு மேல் வளர்ச்சி அடை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யப் பொரு­ளி­யல் தொடர்ந்து விரி­வடைந்து 2050க்குள் அமெ­ரிக்­கா, சீனா­வுக்­கு அடுத்த நிலை­யில் வரக்­கூ­டும் என நிபு­ணர்­கள் பல­ரும் கூறு­கின்­ற­னர்.

ஏறக்­கு­றைய 1.4 பில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்­டுள்ள இந்­தியா, சீனாவை விஞ்சி அடுத்த ஆண்டு உல­கின் ஆக அதிக மக்­கள்­தொகை கொண்ட நாடாக விளங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆசி­யா­வுக்­கும் அதற்கு அப்­பாற்­பட்­டும் சீனா­வின் ஆதிக்­கத்­திற்கு சவால் விடுக்கும் நாடாக இந்­தி­யாவை அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள் கரு­து­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் சுதந்­திர தினத்தை முன்­னிட்டு இந்­தி­யா­வுக்கு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அனுப்­பிய வாழ்த்­துச் செய்­தி­யில், அமெ­ரிக்­கா­வும் இந்­தி­யா­வும் "இன்­றி­ய­மை­யாத பங்­கா­ளி­கள்" எனக் குறிப்­பிட்­டார். வரும் ஆண்­டு­களில் உல­கம் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளைச் சமா­ளிக்க இரு நாடு­களும் ஒன்­றி­ணைந்து செயல்­படும் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், நேற்று முன்தினம் அதன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.