மலேசியாவில் அனேகமாக இவ்வாண்டு பொதுத் தேர்தல்: ஸாஹிட்

மலேசியாவில் அனேகமாக இவ்வாண்டு பொதுத் தேர்தல்: ஸாஹிட்

2 mins read

மலே­சி­யா­வில் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­படும் 15வது பொதுத் தேர்­தல் அனே­க­மாக இவ்­வாண்டு நடத்­தப்­ப­ட­லாம் என்று தேசிய முன்னணிக் கூட்­ட­ணித் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி கூறி­ இ­ருக்­கி­றார். இது­கு­றித்து பிர­த­மர் இஸ்மாயில் சப்ரி யாக்­கோப்­பிற்கு மாறு­பட்ட எதிர்­பார்ப்பு இருக்­க­லாம் என்­றா­லும், அம்னோ கட்­சி­யின் ஐந்து தலை­வர்­க­ளு­டன் அவர் நிச்­ச­ய­மாக கலந்­தா­லோ­சிப்­பார் என்­றார் திரு ஸாஹிட்.

அம்னோ தலை­வ­ரு­மான திரு ஸாஹிட், தேசிய முன்­ன­ணிக் கூட்­ட­ணி­யின் மக­ளிர் அணி­யான வனிதா பாரி­சா­னின் மாநாட்­டில் நேற்று முன்­தி­னம் முடி­வுரை ஆற்­றி­ய­போது இத­னைத் தெரி­வித்­தார்.

"அவர் (திரு இஸ்­மா­யில்) கட்சிக்­கா­ரர் என்­றும் மிகச் சிறந்த நேரம் எது என்­பது பற்­றி­யும் அவ­ருக்­குத் தெரி­யும் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது," என்று திரு ஸாஹிட் சொன்­னார்.

திரு ஸாஹிட், துணைத் தலைவர் முக­மது ஹசான், உதவித் தலை­வர்­கள் இஸ்­மா­யில் சப்ரி, காலித் நோர்­டின், மாஹ்ட்­ஸிர் காலித் ஆகி­யோர் அம்­னோ­வின் ஐந்து உயர்­மட்­ட தலை­வர்­க­ளா­வர்.

எதிர்­கா­லத்­தில் கூடு­தல் பிரச்­சி­னை­கள் தலை­தூக்­கக்­கூ­டும் என்­ப­தால் பொதுத் தேர்­த­லைத் தாம­தப்­ப­டுத்­தக் கூடாது என்று திரு ஸாஹிட் வலி­யு­றுத்­தி­னார்.

பொதுத் தேர்­த­லில் வெற்­றி­ அடைய தேசிய முன்­ன­ணிக் கூட்­ட­ணிக்கு வாய்ப்பு உள்­ளது என்ற உத்­த­ர­வா­தத்தை ஆய்வு ஒன்று வழங்க முடிந்­தால் நாடா­ளு­மன்­றத்தை தாம் கலைப்­ப­தாக பிர­த­மர் இஸ்­மா­யில் கூறி­யி­ருந்­தார்.

எதிர்­வ­ரும் தேர்­தலை முன்­னிட்டு களத்­தில் மக்­க­ளின் மன­நி­லை­யைக் கண்­ட­றிய முழு­மை­யான ஆய்வு ஒன்றை மக­ளிர் அணி­யான வனிதா நடத்த வேண்­டும் என்று தாம் விரும்­பி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"நாம் இரு­ளில் போருக்­குச் செல்­லக்­கூ­டாது. எங்­க­ளது வலிமை பற்றி எங்­க­ளுக்­குத் தெரி­யாது. இந்த ஆய்வு இல்லை என்­றால் வாக்­க­ளிப்பு நாளில் எங்­க­ளால் எவ்­வாறு வாக்­கா­ளர்­க­ளைப் பெற முடி­யும்?" என்று அவர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், இவ்­வாண்டு இரண்­டாம் காலாண்­டில் மலே­சியா­வின் பொரு­ளி­யல் வளர்ச்சி, இந்த வட்­டா­ரத்­தில் பல நாடுகளை விஞ்சிவிட்டதாக நேற்று திரு இஸ்மாயில் கூறினார்.