ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் தீ; ஒருவர் மரணம், மூவர் மீட்கப்பட்டனர்

1 mins read
4d014c7a-0224-4062-b970-90653cec7cf0
தீப்பற்றிய வீடு. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -

ஜூரோங் ஈஸ்ட் அடுக்குமாட்டி வீட்டில் ஏற்பட்ட தீயில் ஒருவர் மாண்டுள்ளர்.

இன்று அதிகாலை (16 ஆகஸ்ட்), ஜூரோங் ஈஸ்ட் ஸ்த்ரீட் 21, புளோக் 236ன் 9ஆவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் தீப்பற்றியது.

அதிகாலை 2.50 மணிக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்தது.

புகைமூட்டம் மற்றும் தீயின் அனல் அதிகமாக இருந்தால் தீயணைப்பு வீரர்கள் மூச்சுவிடும் கருவிகளை அணிந்து தீப்பற்றிய வீட்டினுள் நுழைந்தனர்.

அந்த வீட்டில் இருந்த ஒருவர் முன்னதாகவே சுயமாக வெளியேறிவிட்டார்.

அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள வீட்டினுள் வல்லந்தமாக நுழைய வேண்டியிருந்தது. அங்கு மூவர் மீட்கப்பட்டனர்.

தீ ஏற்பட்ட வீட்டினில் உயிரற்ற ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.