1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை: முன்னாள் மலேசியப் பிரதமரின் கடைசி முயற்சியும் தோல்வி

1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை: முன்னாள் மலேசியப் பிரதமரின் கடைசி முயற்சியும் தோல்வி

2 mins read
1df7b504-b36b-4bad-8c1b-62dea752a10f
மேல்முறையீட்டு வழக்கிலும் தோற்றுப்போனால் திரு நஜிப் ரசாக் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்குவார். படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சிய அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­ன­மான 1எம்­டிபி ஊழல் வழக்கு தொடர்­பான விசா­ர­ணையை ரத்து செய்­வ­தற்­கான அந்­நாட்­டின் முன்­னாள் நஜிப் ரசாக்­கின் இறுதி முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

இவ்­வ­ழக்­கில் தமக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னையை எதிர்த்து திரு நஜிப் மேல்­மு­றை­யீடு செய்­துள்ள நிலை­யில், அம்­மனு குறித்த விசா­ரணை நாளை இடம்­பெ­றும் என்று மலே­சிய கூட்­ட­ரசு நீதி­ மன்றம் தெரிவித்திருக்கிறது.

மேல்­மு­றை­யீட்­டி­லும் தோல்வி கிட்­டி­னால் திரு நஜிப் 12 ஆண்டு கள் சிறைத்­தண்­ட­னையை எதிர் நோக்க வேண்­டி­யி­ருக்­கும். அத்­து­டன், 210 மில்­லி­யன் ரிங்­கிட் (S$65 மி.) அப­ரா­தத்­தை­யும் இவர் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

மேலும், தமக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னையை ரத்து செய்­யத் தவ­றி­னால், மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வதற்­கான தகு­தி­யை­யும் திரு நஜிப் இழக்க நேரிடும்.

தம் மீதான ஊழல் வழக்­கில் கூடு­தலாக ஒரு சான்றைச் சேர்க்­க­வேண்­டு­மென்ற திரு நஜிப்பின் முறையீட்டைக் கூட்டரசு நீதி­மன்­றம் நேற்று நிரா­க­ரித்­தது.

1எம்டிபியின் முன்­னாள் துணை நிறு­வ­ன­மான எஸ்­ஆர்சி இன்­டர்­நே­ஷ­ன­லில் இருந்து 42 மில்­லி­யன் ரிங்­கிட்டை முறை­கே­டா­கப் பயன்­படுத்தி­ய­தற்­காக உயர்­ நீ­தி­மன்ற நீதி­பதி நஸ்­லான், நஜிப்­பிற்­குச் சிறைத் தண்­டனை விதித்­தார்.

நீதி­பதி நஸ்­லான் மீதான நம்­ப­கத்­தன்மை குறித்து ஐயப்­ப­டு­வ­தா­கக் கூறி, திரு நஜிப் தரப்பு மேல்­மு­றை­யீடு செய்­தது.

இந்­நி­லை­யில், மலே­சி­யா­வின் தலைமை நீதி­பதி மைமுன் துவான் மாட் தலை­மை­யி­லான ஐவர் குழு, புதிய சான்றைச் சேர்ப்­ப­தற்­கான விண்­ணப்­பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இறு­தி­க்கட்­டத்­தில் இருக்­கும் இந்த வழக்கு விசா­ர­ணை­யில் புதிய சான்றுகளைச் சேர்ப்­ப­தற்­கான முக்­கி­யத்­து­வம் பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று நீதிபதி மைமுன் சொன்­னார்.

"எங்­க­ளது சிந்­த­னைக்கு எட்­டி­ய­வரை இந்த வழக்­கில் நீதி தவ­ற­வில்லை என்­பது எங்­க­ளின் ஒரு­மித்த முடிவு," என்­றார் அவர்.

எனவே, புதிய சான்றைச் சேர்ப்­ப­தற்­கான விண்­ணப்­பத்தை தள்­ளு­படி செய்­கி­றோம் என்று அவர் தீர்ப்­ப­ளித்­தார்.

இத­னை­ய­டுத்து, மேல்­மு­றை­யீட்டு விசா­ர­ணையை மூன்று மாதங்­களுக்கு ஒத்­தி­வைக்க நஜிப் தரப்பு கோரியது. தமது தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் புதி­ய­வர்­கள் என்பதால் அவர்­கள் தயா­ரா­வ­தற்குக் கால­ அ­வ­கா­சம் தேவை என்று தற்காப்புத் தரப்பு வாதிட்டது.

ஆனால், நீதிபதிகள் குழு அந்த வாதத்தை ஏற்கவில்லை.

இம்மாதம் 26ஆம் தேதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்த மேல்­மு­றை­யீட்டு விசா­ர­ணை­யில், பின்­னொரு தேதி­யில் தீர்ப்பு அளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பல பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான 1எம்­டிபி ஊழல் தொடர்­பில் திரு நஜிப் எதிர்­கொள்­ளும் ஐந்து ஊழல் வழக்­கு­களில் முத­லா­வ­து­தான் எஸ்­ஆர்சி இன்­டர்­நே­ஷ­னல் வழக்கு.

மொத்­தம் ஒன்­பது பில்­லி­யன் ரிங்­கிட் பணம் சம்­பந்­தப்­பட்ட 1எம்­டிபி ஊழல் வழக்­கில் திரு நஜிப் மீது 42 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.