ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் மீண்டும் தீ

ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் மீண்டும் தீ

1 mins read
71af0f55-46ce-4a0e-8376-eb35d7fff1df
ஜூரோங் ஈஸ்ட் வீவக வீட்டில் இரண்டாவது முறையாக தீ மூண்டது. படம்: சாவ்பாவ் -

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ மூண்டு ஒருவர் பலியான வீட்டில் புதன்கிழமையன்று (17 ஆகஸ்ட்) மீண்டும் தீ மூண்டது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் உள்ள வீவக புளோக் 236ல் செவ்வாய்க்கிழமையன்று (16 ஆகஸ்ட்) தீ மூண்டது.

அதில் 48 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் அங்கு மீண்டும் தீ மூண்டது.

இது குறித்து புதன்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

வீட்டின் அறைகளில் ஒன்றில் தீ மூண்டதாகத் தெரியவந்தது.

இடிபாடுகளுக்குள்ளே இருந்திருக்கும் தீப்பிடித்துக்கொள்ளக்கூடிய பொருள்களால் வீட்டில் மீண்டும் தீ மூண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக மூண்ட தீயில் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை.