'அடுத்த வாரம் நாடு திரும்பும் கோத்தபாய'

'அடுத்த வாரம் நாடு திரும்பும் கோத்தபாய'

1 mins read
a04d21e8-5b17-4f7f-a45f-b7380d8a7938
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே. படம்: ராய்ட்டஸ்ர்ஸ் -

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று அந்நாட்டு ஊடகமான நியூஸ்ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது.

திரு ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று இலங்கை திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதரும் திரு ராஜபக்சேயின் உறவினருமான திரு உதயங்கா வீரத்துங்கா கூறியதாக நியூஸ்ஃபர்ஸ்ட் குறிப்பிட்டது.

ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத் தீவுகளுக்குத் தப்பியோடிய திரு ராஜபக்சே, குறுகிய கால விசாவில் சில வாரங்களுக்கு சிங்கப்பூரில் இருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது அவர் தாய்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார்.