'அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது'

'அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது'

2 mins read

ஓபி­எஸ் தரப்பு கொண்­டாட்­டம்; ஈபி­எஸ் தரப்பு திண்­டாட்­டம்.

அதி­முக மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பி­னர் கூட்­டிய பொதுக்­குழு செல்­லாது என சென்னை உயர் நீதி­மன்­றம் நேற்று அதி­ர­டி­யாக தீர்ப்பு வழங்­கி­யது.

இத­னால் உற்­சா­க­ம­டைந்த ஓபி­எஸ் தரப்­பி­னர் நேற்று பட்­டாசு வெடித்து தங்­க­ளு­டைய மகிழ்ச்சி யைக் கொண்­டா­டி­னர்.

அதே சம­யத்­தில் பழ­னிச்­சாமி தரப்­பி­னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோ­ச­னை­ நடத் தினர்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வான­க­ரத்­தில் அதி­முக பொதுக்­குழு கூட்­டம் நடை­பெற்­றது. அதில் எதிர்­பா­ராத பல்­வேறு முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­ கிணைப்­பா­ளர் பத­வி­கள் அகற்­றப்­பட்­டன.

மேலும் அதி­மு­க­வின் தற்­கா­லிக பொதுச் செய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னிச்­சாமி தேர்வு செய்­யப்­பட்­டார்.

இந்த நிலை­யில் அதி­முக பொதுக்­கு­ழு­விற்கு தடை விதிக்க வேண்­டும் என்று ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ. பன்­னீர்­செல்­வ­மும் பொதுக்குழு உறுப்­பி­னர் வைர­முத்­து­வும் சென்னை உயர் நீதி­ மன்­றத்­தில் தனித்­த­னி­யாக வழக்கு தொடுத்­த­னர்.

இந்த வழக்கை நீதி­பதி கிருஷ்­ணன் ராம­சாமி விசா­ரித்து வந்த நிலை­யில் புதிய நீதி­ப­தி­யாக ஜெயச்­சந்­தி­ரன் நிய­மிக்­கப்­பட்­டார்.

இம்­மா­தம் 10, 11 தேதி­களில் நீதி­பதி ஜி. ஜெயச்­சந்­தி­ரன் இவ் வழக்கை விசா­ரித்­தார்.

அதி­முக பொதுக்­குழு, கட்சி விதி­மு­றை­க­ளின்­படி கூட்­டப்­ப­ட­வில்லை என்று ஓபி­எஸ் தரப்­பி­னர் வாதிட்­ட­னர். அதற்கான காரணங் களையும் அவர் எடுத்துரைத்தனர்.

ஆனால் எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பி­னர், பொதுக்­கு­ழுவை கூட்ட 2,000 பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் கடி­தம் எழு­தி­ய­தா­க­வும் அந்த அடிப்­ப­டை­யில்­தான் பொதுக்­குழு கூட்­டப்­பட்­டது என்­றும் தெரி­வித்­த­னர்.

இந்த நிலை­யில் கட்சி விதி­கள் மீறப்­பட்­டி­ருந்­தால் உரிய நட­ வடிக்கை எடுக்­கப்­படும் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்­தார் நீதி­பதி ஜெயச்சந்­தி­ரன்.

இந்த வழக்­கில் நேற்று தீர்ப்பு அளிக்­கப்­பட்­டது.

"ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் இணைந்­து­தான் பொதுக்­குழு, செயற்­கு­ழுவை கூட்ட வேண்­டும், ஓ.பன்­னீர் செல்­வம், எடப்­பாடி பழ­னி­சாமி தனித்­த­னி­யாக கூட்­டம் கூட்­டக்கூடாது, பொதுக்­கு­ழுவை கூட்ட ஆணை­யரை நிய­மிக்க வேண்­டும், அதி­மு­க­வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்­கும் என்று நீதி­பதி ஜி.ஜெயச்­சந்­தி­ரன் உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

இதன் மூலம் ஓ.பன்­னீர்­செல்­வம் அதி­மு­க­வின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் பொறுப்­புக்­குத் திரும்­பி­யி­ருக்­கி­றார்.

இதை­ய­டுத்து ஓ. பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் உற்சாகமடைந்து உள்ளனர்.

இதற்­கி­டையே உயர் நீதி­மன்­றம் அளித்­துள்ள தீர்ப்பு குறித்து சட்ட நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பைச் சேர்ந்த ஜெயக் குமார் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளுக்கு நேற்று பேட்­டி­ய­ளித்த அவர், சட்­ட­ரீ­தி­யாக இதனை எதிர்கொள்­வோம் என்­றார்.

"பொதுக்­கு­ழு­தான் சர்வ அதி­கா­ரம் படைத்­தது. உயர் நீதி­மன்­றம் பிறப்­பித்­துள்ள உத்­த­ர­வில் ஆணை­யர் ஒரு­வரை நிய­மித்து பொதுக் குழுவை கூட்ட வேண்­டும் என்று சொல்­லப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்றுக் கொண்­டாக வேண்­டும். இது பற்றி அதி­கம் விமர்­சிக்க விரும்­ப­வில்லை.

"தீர்ப்­பின் முழு விவ­ரம் கிடைத்­த­தும் சட்ட நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சித்து உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும்," என்று முன்­னாள் தமி­ழக அமைச்­ச­ரு­மான ஜெயக்­கு­மார் கூறி­னார்.