கோத்தபாய அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்

கோத்தபாய அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்

2 mins read

இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்­பு­வார் என்று முன்­னாள் தூதர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி உள்­ளூர் ஊட­க­மான நியூஸ்­ஃபர்ஸ்ட் தெரி­வித்­தது.

கடந்த ஜூலை மாதம் ஆயி­ரக்­ க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அதி­பர் மாளி­கையில் நுழைந்து ஆக்கிரமித்தபோது அவர் நாட்­டை­விட்டு வெளி­யே­றி, மாலத்­தீவு வழி­யாக சிங்­கப்­பூர் வந்­து­சேர்ந்­தார்.

சிங்­கப்­பூர் வந்­த­தும் தனது அதி­பர் பதவி வில­கல் கடி­தத்தை அவர் இலங்­கைக்கு அனுப்பி வைத்­தார்.

அதன் பிறகு சிங்­கப்­பூ­ரில் சில வாரங்­கள் தங்கியிருந்த அவர், தாய்­லாந்­துக்­குச் சென்­றார்.

இந்நிலையில் இம்­மா­தம் 24ஆம் தேதி அவர் நாடு திரும்­பு­வார் என்று திரு ராஜ­பக்­சே­யின் உற­வி­ன­ரான ரஷ்­யா­வுக்­கான முன்­னாள் இலங்கை தூதர் உத­யங்க வீர­துங்­காவை சுட்டிக்­காட்டி நியூஸ்­ஃபர்ஸ்ட் தக­வல் தெரி­வித்­தது.

ஆனால் இதனை உறுதிப்படுத்த வீர­துங்­கா­வையோ கோத்­த­பாய வையோ ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தால் தொடர்பு கொள்ள முடி­ய­வில்லை.

இலங்கை, 1948க்குப் பிறகு வர­லாறு காணாத நெருக்­க­டி­யில் சிக்கி இருக்­கிறது. நாட்­டின் பொரு­ளி­யலை தவ­றா­கக் கையாண்ட ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர்­தான் இதற்கு கார­ணம் என்று மக்­கள் கொதிப்­ப­டைந்து உள்­ள­னர்.

இலங்கையிலிருந்து வெளி யேறிய பிறகு கோத்தபாய ராஜபக்சே இதுவரை பொது இடங்களில் தலை காட்டவில்லை.

அவருக்குப் பிறகு அதிபராகி உள்ள ரணில் விக்கிரமசிங்கே, கோத்தபாய ராஜபக்சே நாடு திரும்பினால் மீண்டும் குழப்பம் ஏற்படும் என்று கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.

"அவர் நாடு திரும்புவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கான அறி குறியும் இல்லை," என்று ஜூலை 31ஆம் தேதி வால்ஸ்திரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. அவசரநிலை உத்தரவும் இன்றுடன் காலாவதியா கிறது. இந்த நிலையில் இனியும் அவசரநிலை நீட்டிக்கப்படாது என்று அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.