‘டிபிஎஸ்’ வங்கியின் பியூஷ் குப்தா ‘எஸ்எம்யு’ தலைவராகிறார்

ஆசி­யா­வின் முன்­னணி வங்­கி­களில் ஒன்­றான டிபி­எஸ்­ஸின் தலைமை நிர்­வாகி பியூஷ் குப்­தா­வுக்கு மேலும் ஒரு முக்­கிய பொறுப்பு வழங்­கப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு ஜன­வரி 12ஆம் தேதி­யி­லி­ருந்து அவர், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (எஸ்­எம்யு) தலை­வ­ராக செயல்­படுவார். அப்­பொ­றுப்­பில் உள்ள ஹோ குவான் பிங் அதே நாளில் பதவி வில­கு­கி­றார்.

எஸ்­எம்யுவை சிங்­கப்­பூ­ரின் 3வது பல்­லைக்­க­ழ­க­மாக உரு­வாக் கும் முயற்­சி­யில் தலை­வர் பொறுப்பை ஏற்க திரு ஹோவுக்கு அர­சாங்­கம் அழைப்பு விடுத்­தது.

இதனை ஏற்­றுக்­கொண்ட அவர் எஸ்­எம்யுவை பல்­க­லைக்­க­ழ­கப் பாதைக்கு இட்­டுச் சென்­றார்.

திரு ஹோவும் முன்­னாள் துணைப் பிர­த­மர் டோனி டானும் பல்­க­லைக்­க­ழ­க­மாக மாறு­வ­தற்­கான அடிப்­படை அம்­சங்­க­ளைப் புகுத்தியதாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் எஸ்­எம்யு தெரி­வித்­தது.

நிர்­வா­கத்தை வலுப்­ப­டுத்­தி­யது, சமூக அறி­வி­யல் பாடங்­களை வழங்­கி­யது, மாண­வர்­க­ளுக்கு பரந்த அள­வி­லான கல்­வியை வழங்­கி­யது ஆகி­யவை அவற்­றில் குறிப்­பி­டத் தக்­கவை.

பென்­சில்­வே­னியா பல்­க­லைக் கழ­கத்­தின் வார்ட்­டன் பள்ளி போன்ற பாடத்­திட்­டங்­க­ளை­யும் கலந்­து­ரை­யா­டலை உள்­ள­டக்­கிய வகுப்­ப­றை­க­ளை­யும் கொண்ட அமெிக்­கக் கல்வி நிலை­யங்­க­ளின் பாணி­யில் சிங்­கப்­பூ­ரின் முதல் பல்­க­லைக்­க­ழ­க­மாக 2000ஆம் ஆண்­டில் எஸ்­எம்யு உரு­வா­னது.

முதல் தொகு­தி­யில் 306 மாண வர்­கள் சேர்த்­துக் கொள்­ளப்­பட்­ட­னர். ஆனால் இன்று 12,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் அதில் படித்து வரு­கின்­ற­னர். ஏறக்­கு­றைய 36,000 பேர் அதன் முன்­னாள் மாண­வர்­க­ளாக உள்­ள­னர்.

பன்­யான் ட்ரி ஹோல்­டிங்ஸ், லகுனா ரிசோர்ட்ஸ் மற்­றும் ஹோட்­டல்­கள் ஆகி­ய­வற்­றின் நிறு­வ­ன­ரும் நிர்­வா­கத் தலை­வ­ரு­மான திரு ஹோவுக்கு அவ­ரது பங்­க­ளிப்பை சிறப்­பிக்­கும் வகை­யில் 2009ஆம் ஆண்­டில் மெச்­சத்­தக்க விருது வழங்­கப்­பட்­டது,

2017ல் தேசிய நாள் விரு­து­களில் நாட்­டின் உயரிய மதிப்­புக்க தனிச்­சி­றந்த சேவை விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

"எஸ்­எம்யுவை ஒரு வர்த்­த­கப் பள்­ளிக்கு மேலாக திரு ஹோ உயர்த்­தி­க்காட்டியுள்ளார்.

அவ­ரது தலை­மை­யில் வர்த்­கப் பள்­ளி­யாக மட்­டுமே இருந்த அது, பல்­க­லைக்­க­ழ­க­மாக உரு­மா­றி­யது. தற்­போது கணி­னி­யி­யல், தக­வல் அமைப்பு, பொரு­ளி­யல், சட்­டம் மற்றும் சமூக அறி­வி­யல் ஆகிய வற்றை உள்­ள­டக்கி எட்டு பள்­ளி­கள் அதில் செயல்­ப­டு­கின்­றன," என்று தனது அறிக்­கை­யில் எஸ்­எம்யு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!