பிரதமர் பேரணி உரையில் கொரோனா அனுபவ பாடம்

பிரதமர் பேரணி உரையில் கொரோனா அனுபவ பாடம்

3 mins read

எதிர்காலத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும் லீ சியன் லூங் உரையாற்றுவார்

பிர­த­மர் லீ சியன் லூங் நாளை தேசிய தினப் பேரணி உரை­யாற்று­கி­றார். கொவிட்-19 கிரு­மித்­தொற்று பற்­றிய சிங்­கப்­பூ­ரின் அனு­ப­வம் குறித்து அவர் பேரணி உரையில் பேசு­வார்.

சிங்­கப்­பூர் எதிர்­கா­லத்தை எப்படி பாது­காப்­பா­ன­தாக ஆக்க முடி­யும் என்­பது பற்­றி­யும் அவர் விளக்­கு­வார். அங் மோ கியோவில் இருக்கும் ஐடிஇ மத்­திய கல்­லூரியில் திரு லீ பேரணி உரை­யாற்­று­வார்.

அந்த உரைக்குத் திரு லீ ஆயத்­த­மா­னதை நேற்று ஃபேஸ்புக்­கில் வெளி­யிட்ட ஒரு முன்குறிப்­பில் அவர் விளக்­கி­னார்.

கொவிட்-19 தொற்­றுக்­குப் பிறகு முழு­மூச்­சில் பேரணி உரை­யாற்­றப்­போ­வது இப்­போ­து­தான் என்று அவர் தெரி­வித்­தார்.

திரு லீ 2021ல் தனது பேரணி உரையை மீடி­யா­கார்ப் நிறு­வ­னத்­தின் ஒளிப்­ப­திவுக் கூடத்­தில் இருந்து ஆற்­றி­னார். 2020ல் பேரணி உரை ரத்தானது.

ஒவ்­வோர் ஆண்­டின் மிக முக்கி­ய­ அர­சி­யல் உரை பேரணி உரை­தான் என்று கரு­தப்­ப­டு­கிறது.

திரு லீ, தமது உரை­யில் பொரு­ளி­யல் சவால்­கள் பற்­றி­யும் புவிசார் அர­சி­யல் சவால்­கள் குறித்தும் உரை­யாற்­றும் வாய்ப்புள்ளதாக கவ­னிப்­பா­ளர்­கள் கூறி உள்­ள­னர்.திரு லீயின் தேசிய நாள் செய்தி­யில் அந்த இரண்­டுமே முக்­கிய அம்­சங்­க­ளாக இடம்­பெற்றிருந்தன.

இந்த வட்­டா­ரம், வரும் ஆண்டு­களில் முன்பு இருந்­த­தைப் போல அந்த அள­வுக்கு அமை­தி­யா­க­வும் நிலை­யா­க­வும் இல்­லா­மல் போகக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது என்­பதால் அதைச் சமா­ளிக்­கும் வகை­யில், சிங்­கப்­பூ­ரர்­கள் மன­ரீ­தி­யில் ஆயத்­த­மாக வேண்­டும் என்று அந்­தச் செய்­தி­யில் திரு லீ குறிப்­பிட்டு இருந்­தார்.

அதே­போல, பண­வீக்­க­மும் வட்டி விகி­தங்­களும் பழை­ய­படி குறை­வ­தற்­கான வாய்ப்­பும் குறைவு என்று அவர் தெரி­வித்து இருந்­தார்.

இத­னி­டையே, பிர­த­ம­ரின் பேரணி உரை பற்றி கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் லீ குவான் இயூ பொதுக் கொள்­கைக் கல்லூரியைச் சேர்ந்த இணைப் பேரா­சிரி­யர் டெரன்ஸ் ஹோ, பிர­த­மர் தமது உரை­யில் பண­வீக்­கம் பற்றி பேசக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

திரு லீ வாழ்க்­கைச் செலவு பற்­றி­யும் பேசு­வார் என்று கூறிய இணைப் பேரா­சி­ரி­யர், சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 சூழ்­நிலை பற்றிய புதிய தக­வல்­களும் அந்த தொற்று­நோ­யைக் கையாள அர­சாங்­கம் எடுத்துவரும் அணு­கு­முறை குறித்தும் பேரணி உரை­யில் திரு லீ விளக்­கம் அளிப்­பார் என்­றும் கூறி­னார்.

முன்­னே­றும் சிங்­கப்­பூர் தேசிய கலந்­து­ரை­யா­டல் குறித்­தும் திரு லீ விவ­ரிப்­பார் என்­றும் இணைப் பேரா­சிரி­யர் குறிப்பிட்டார்.

பேரணி உரையை நேரடியாக காண

பிர­த­மர் லீ சியன் லூங் ஆற்­றும் பேரணி உரை நாளை மாலை 6.45 மணிக்­குத் தொடங்­கு­ம். அவர் முத­லில் மலாய், பிறகு சீன மொழி­யி­ல் உரை­யாற்­று­வார்.

திரு லீயின் ஆங்­கில உரை இரவு 8 மணிக்­குத் தொடங்­கும். அவ­ரின் உரையை உள்­ளூர் தொலைக்­காட்சி ஒளி­வ­ழி­களும் வானொலி நிலை­யங்­களும் ஒளி, ஒலி பரப்­பும். தமிழ் ஒளி, ஒலி பரப்பு வசந்­தத்­தி­லும் ஒலி 96.8 எஃப்எம் வானொ­லி­யி­லும் மாலை 6.45 முதல் இரவு 8 மணி வரை இடம்­பெறும்.

பிர­த­மர் அலு­வ­லக யூடி­யூப் (www.youtube.com/pmosingapore), பிர­த­ம­ரின் ஃபேஸ்புக் (www.facebook.com/leehsien loong), ரீச் ஃபேஸ்புக் (www.facebook.com/REACHSingapore) ஆகி­ய­வற்­றி­லும் Mewatch.sg, cna.asia, சிஎன்ஏ யூடி­யூப், 8வேல்ட்.காம் ஆகிய இணைய ஒளி வழி­களி­லும் பேரணி உரை­யைக் காண­லாம்.

நேரடி ஒளிபரப்பைத் தவறவிட்டவர்கள் ஆகஸ்ட் 22 முதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg/ndr என்ற முகவரியில் பேரணி உரையைக் காணலாம்.