புதுடெல்லி துணை முதல்வர் வீடு உட்பட ஆறு மாநிலங்களில் 21 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி துணை முதல்வர் வீடு உட்பட ஆறு மாநிலங்களில் 21 இடங்களில் சிபிஐ சோதனை

2 mins read

இந்தியத் தலைநகர் புதுடெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மது பானக் கொள்கை திருத்த மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தனியாருக்குச் சாதகமாக செயல்பட்டு இருப்பதாக புகார்கள் தாக்கலாகி உள்ளன.

இது பற்றி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், நேற்று திடீரென்று ஆறு மாநிலங்களில் 21 இடங்களில் புகுந்து சோதனை நடத்தினர். புதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அவரது அமைச்சின் அதிகாரிகள் வீடுகளிலும் அதிகாரிகள் நுழைந்த னர். சோதனைகளில் கைப்பற்றப் பட்டவை பற்றிய விவரங்கள் தெரிய வில்லை.

இதனிடையே, சிபிஐ சோதனை களை மனிஷ் சிசோடியாவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடுமையாகக் கண்டித்தனர்.

சிபிஐ சோதனைகளில் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்று மனிஷ் சிசோடியா டுவிட்டரில் கூறினார். அதே­போல் திடீர் சோதனை­களை முதல்­வர் கெஜ்­ரி­வா­லும் குறைகூறினார்.

"இந்­தி­யா­வின் தலை­ந­கர் புது­டெல்­லி­ ஆட்சியைப் பாராட்டி நியூ­யார்க் டைம்ஸ் தனது அனைத்­துலக பதிப்­பில் முதல் பக்­கத்­தில் திரு மனிஷ் சிசோ­டி­யா­வின் படத்­து­டன் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

"அது வெளி­யாகி இருக்­கும் அதே நாளில் எங்­கள் பெய­ரைக் கெடுப்­ப­தற்­காக சிபிஐ சோத­னை­களை நடத்­து­கிறது. நடத்­தட்­டும். நாங்­கள் அதை வர­வேற்­கி­றோம். முழு ஒத்­துழைப்பு கொடுப்­போம்," என்று முதல்­வர் தெரி­வித்­தார்.

சிபிஐ சோதனைகளை எதிர்த்து நேற்று துணை முதல்­வர் வீட்­டிற்கு வெளியே ஆர்ப்­பாட்­டம் நடந்­ததாக வும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் நால்­வர் உள்­ளிட்ட சுமார் 80 பேரைக் காவல்­துறை கைது செய்த தாகவும் உச்ச நீதிமன்றம் அமைந்து உள்ள இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் ஊட­கங்கள் தெரிவித்தன.