கிருஷ்ண ஜெயந்தி விழா: நெரிசலில் சிக்கி இருவர் மரணம்

கிருஷ்ண ஜெயந்தி விழா: நெரிசலில் சிக்கி இருவர் மரணம்

2 mins read

இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் இருக்­கும் மதுரா வட்­டா­ரத்­தில் உள்ள பன்கே பிஹாரி கோயி­லில் கூட்ட நெரி­ச­லில் சிக்கி இரு­வர் மாண்­ட­னர்.

இதில் காய­ம­டைந்த குறைந்­தது ஆறு பேர் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்லப்­பட்­ட­னர்.

ஆக்­ரா­வில் இருந்து ஏறக்குறைய 50 கிலோ­மீட்­டர் தொலை­வில் மதுரா நகர் உள்­ளது. அங்­குள்ள பன்கே பிஹாரி கோயி­லில் நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நடை­பெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்­டாட்­டங்­க­ளின்­போது இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

கோயி­லில் நள்­ளி­ரவு நடந்த சிறப்பு வழி­பாட்­டைக் காண ஏரா­ள­மான பக்­தர்­கள் அங்கு வரத் தொடங்­கி­னர்.

நேரம் செல்ல செல்ல ஏரா­ள­மான பக்­தர்­கள் திரண்டு வந்­திருந்­த­னர்.

கோயி­ல் நடை திறக்­கப்­பட்­ட­தும் பக்­தர்­கள் வேகமாக ஒரு­வரை ஒருவர் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு கோயி­லுக்­குள் நுழைய முற்­பட்­ட­னர்.

கூட்ட நெரி­சல் கார­ண­மாக பின்­னி­ரவு 2 மணி­ய­ள­வில் ஆல­யத்­தில் இருந்த சிலர் மூச்­சுத் திணறி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்­த­தாக மதுரா நகர் மூத்த காவல்­துறை அதி­காரி அபி­ஷேக் யாதவ் செய்தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

அத­னால் நிலை­மை­யைச் சமா­ளிக்க மக்­கள் உள்ளே வரு­வதை காவல்­து­றை­யி­னர் தடுக்­க­வேண்­டிய சூழல் உரு­வா­னது.

அங்கு ஆண் பக்­தர் ஒரு­வ­ரும் பெண் பக்­தர் ஒரு­வ­ரும் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லும் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மருத்­து­வ உதவியாளர்கள் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தி­னம் கிருஷ்ண ஜெயந்தி கொண்­டாட்­டங்­களில் பங்­கேற்க மதுரா வந்­தி­ருந்த உத்தரப் பிர­தேச மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், இந்­தச் சம்பவம் குறித்து தாம் மிகுந்த வேதனை அடைந்து உள்­ள­தா­கக் கூறி­னார்.

காய­ம் அடைந்­த­வர்­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை உடனடியாக எடுக்க அதி­காரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டார்.

சம்­ப­வம் குறித்து அப்­ப­குதி காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.