திருமணத்தை வரையறுக்க நாடாளுமன்றத்துக்கு உரிமை

திருமணத்தை வரையறுக்க நாடாளுமன்றத்துக்கு உரிமை

1 mins read
9e0fda6f-538a-493d-ae4c-9e7459cc9100
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாகக் கருதும் 377A சட்டப் பிரிவை ரத்து செய்வதால், திருமண பந்தம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்பதை வரையறுப்பது நாடாளுமன்றத்தின் உரிமை என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தும்.

அதன்அடிப்படையில்குடும்ப ஆதரவுக் கொள்கைகளை வகுப்பதும் அரசாங்கத்தின் உரிமையில் அடங்கும். இதனை அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தில்அரசாங்கம் தெளிவாக வரையறுக்கும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது நாட்டின்மிகஉயர்ந்தசட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில்திருமணத்துக்கு விளக்கம் அளிப்பது ஆகாது. ஆனால், இப்படிச் செய்வதால்திருமண பந்தம் குறித்து நீதிமன்றங்களில் வழக்குத்தொடுப்பது தவிர்க்கப்படும்.

குற்றவியல்சட்டப் பிரிவு 377A நீக்கப்படுவதால், திருமணம் மற்றும் அது தொடர்பான பிற கொள்கைகளை அரசாங்கம் எவ்வாறு பாதுகாக்க விரும்புகிறது என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லியான்ஹ சாவ்பாவ் நாளிதழ்களுக்கு அமைச்சர் சண்முகம் நேற்று அளித்த நேர்காணல் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சிங்கப்பூரில்377A சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர்லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் நேற்று முன்தினம் அறிவித்தார். அதேநேரத்தில், நீதிமன்றங்களில் அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் இந்தச் சட்டபூர்வ திருமண அமைப்புமுறை எதிர்க்கப்படுவதில் இருந்து அரசாங்கம் அதனைப் பாதுகாக்கும் என்றும் அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில்திருத்தம் செய்யப்படும் என்று திரு லீ கூறினார்.