மின்னிலக்கத் துறையில் முன்னேறிவரும் இளையர்கள் 107 பேருக்கு உபகாரச் சம்பளம்

மின்னிலக்கத் துறையில் முன்னேறிவரும் இளையர்கள் 107 பேருக்கு உபகாரச் சம்பளம்

2 mins read
8628d67e-4dc6-4804-9967-4df945296b02
அருள் ஓஸ்வின்அஞ்சலி இளங்கோவன்ர. ஆனந்த் -
multi-img1 of 3

மோன­லிசா

தமிழ்­மொ­ழியை வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரி­டம் கொண்டு செல்ல தொழில்­நுட்­பத்­தில் தமிழ்ப் புழக்­கத்தை அதி­க­ரிப்­பதே சிறந்த வழி என்­கி­றார் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் எஸ்ஜி மின்­னி­லக்க உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற திரு விஜ­ய­கு­மார் அருள் ஓஸ்­வின், 29.

தற்­போது ஒரு தனி­யார் நிறு­வனத்­தில் இணை­யப் பாது­காப்­புப் பொறி­யா­ள­ராக பணி­பு­ரிந்­து­வ­ரும் திரு அருள், இந்த உப­கா­ரச் சம்­பளத்­தின்மூலம் இணை­யப் பாது­காப்­புத் துறை­யில் முது­நி­லைப் பட்­டம் பயில விரும்பு­கி­றார்.

சிங்­கப்­பூர்த் தமிழ்க் கலாசார மையத்­தில் நிர்­வா­கத் துறைத் தலை­வ­ராக இருக்­கும் இவர், உல­களா­விய மின்­னி­லக்­கச் சூழ­லில் சிங்­கப்­பூர் தனிச்­சி­றப்­பு­மிக்க அறி­வார்ந்த மின்­னி­லக்க தேச­மாக உரு­வெ­டுக்க வேண்­டும் என்­றும் கூறி­னார். அதில் தமிழ் மொழி­யும் இணைந்து பய­ணம் செய்­ய­வேண்­டும் என்­பதே இவரது கனவு.

மின்­னி­லக்­கத் துறை­யில் அறி­வார்ந்த சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வதில் இளை­யர்­களை ஊக்­கு­விக்க அத்­து­றை­யில் முன்­னே­றி­வ­ரும் இளை­யர்­கள் 107 பேருக்­குத் தொடர்பு, தக­வல் அமைச்­சும் அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­ம­மும் கூட்­டாக இணைந்து பல்­வேறு பிரி­வு­களில் உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கின. இந்­நி­கழ்ச்சி மரினா பே சேண்ட்­சில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்ட தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும் அறி­வார்ந்த தேசத் திட்­டத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான ஜோச­ஃபின் டியோ, மின்­னி­லக்­கத் துறை­யில் தலை­சி­றந்த தலை­வர்­களை உரு­வாக்­கு­வ­தி­லும் அவர்­கள் நீண்­ட­கா­லத் திறன்­களை வளர்த்­துக்­கொள்வ­தி­லும் அத்­துறை சார்ந்த பல்­வேறு திறமை சார்ந்த வாய்ப்­பு­களை அளிப்­ப­தி­லும் அர­சாங்­கம் அதிக கவ­னம் செலுத்தி வரு­வ­தாகக் கூறி­னார்.

தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர்­க­ளான டாக்­டர் ஜனில் புதுச்­சே­ரி­யும் திரு டான் கியட் ஹாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து­கொண்­ட­னர்.

தொடர்பு, தக­வல் அமைச்­சின் தக­வல் சேவை உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற குமாரி அஞ்­சலி இளங்­கோ­வன், 19, லண்­டன் பொரு­ளியல், அர­சி­யல் அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கத்­தில் இளங்­க­லை வரலாறு பயி­ல­வி­ருக்­கி­றார்ர்.

தொடக்­கக் கல்­லூரி விடு­முறைக் காலத்­தில் கல்வி அமைச்­சின் மர­பு­டைமை நிலை­யத்­தில் ஐந்து மாதங்­கள் வேலைப்­ப­யிற்சி மேற்­கொண்­டார் குமாரி அஞ்­சலி. 1980, 1990களில் சிங்­கப்­பூ­ரில் மூடப்­பட்ட பள்­ளிக்­கூ­டங்­கள் பற்­றிய வர­லாற்றை ஆய்வுசெய்து, அந்­நி­லை­யத்­தின் இணை­யப் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்த அனு­பவம் தமக்கு வர­லாறு மீதி­ருந்த ஆர்­வத்­தைத் தூண்­டி­ய­தாக இவர் சொன்னார்.

"இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் எனக்கு மிகுந்த ஊக்­கம் அளிக்­கிறது. வர­லாற்­றை­யும் கடந்து வந்த பாதை­யை­யும் அறிந்­து­கொள்­வது எதிர்­கா­லப் பய­ணத்­தைத் திறம்­ப­டத் திட்­ட­மி­டப் பேரு­த­வி­யாக இருக்­கும் என்­ப­தா­லேயே வர­லாற்­றுப் பாடத்­தைப் படிக்­க­வுள்­ளேன்," என்­றார் குமாரி அஞ்­சலி.

"பணி­யி­டைக்­கால மாற்­றம் என்­பது ஒரு கடி­ன­மான பய­ணம். பல்­வேறு ஐயங்­கள், தயக்­கங்­கள், சுற்­றத்­தா­ரின் கேள்­வி­க­ளுக்கு இடை­யில் மனந்­த­ள­ரா­மல் துணி­வு­டன் தொடர்ந்து முன்­னே­று­வது சவா­லா­கவே இருந்­தது," என்று கூறி­னார் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் எஸ்ஜி மின்­னி­லக்க உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற திரு ர. ஆனந்த், 35.

இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­தி­னால் சிங்­கப்­பூர்த் தொழில்­நுட்ப, வடி­வமைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 'வடி­வ­மைப்பு மூலம் பாது­காப்பு' துறை­யில் முது­நி­லைப் பட்டத்தை அண்­மை­யில் இவர் முடித்­தார்.