உயர்தர பாதுகாப்பு நடைமுறை பதிவு கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்
தெடுக்க உள்ளூரில் உள்ள சொத்து மேம்பாட்டாளர்களுக்கு உதவும் வகையில் கட்டு மானத் துறையில் இல்லாத மற்ற நிறு
வனங்களுக்கும் அதுதொடர்பான பொதுத் தரவுத்தளம் விரிவாக்கப்படுகிறது.
செக்சேஃப் என்றழைக்கப்படும் அந்தத் தரவுத்தளத்தில் இனி போக்குவரத்து,
உணவுச் சேவைகள், கல்வி ஆகிய துறை
களைச் சேர்ந்த நிறுவனங்களும் இடம்
பெறும்.
முன்பு ஒரே நேரத்தில் அந்தப் பதிவில் உள்ள ஐந்து நிறுவனங்களை மேம்பாட்
டாளர்களால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இம்மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் அதிகரித்த வேலையிட மரணங்களை எதிர்கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
இந்த அணுகுமுறை நடப்பில் இருக்கும்போது ஊழியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால்தான் வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம், புரிதல் ஆகியவை ஒப்பந்ததாரர்
களுக்கு ஏற்படும் என்று திரு ஸாக்கி கூறினார். சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த பாதுகாப்புத் தலைமைத்துவக் கருத்தரங்கில் திரு ஸாக்கி நேற்று கலந்துகொண்டு பேசினார்.
"புதிய நடைமுறையின் விளைவாக மேம்பட்ட பாதுகாப்பு வேலை அணுகு
முறையால் சொத்து மேம்பாட்டாளர்கள் பலனடைகின்றனர். விபத்துகள் காரணமாக அறிவிக்கப்படும் வேலை நிறுத்த உத்தரவுகள் குறையும். அத்துடன் நற்பெயரும் கிடைக்கும்," என்று தி ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களிடம் திரு ஸாக்கி கூறினார்.
செக்சேஃப் தரவுத்தளம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்களின் பொறுப்பின்கீழ் உள்ள வேலையிடங்களில் நிகழ்ந்த மரணங்கள், விதிக்கப்பட்ட வேலை நிறுத்த உத்தரவுகள், பெற்ற விருதுகள் போன்ற தகவல்களை அதிலிருந்து மேம்பாட்டாளர்கள் பெற முடியும்.
கட்டுமானத்துறையில் பாதுகாப்புத் தலைமைத்துவத்துக்கான அவசியம் இருப்பதாக திரு ஸாக்கி வலியுறுத்தினார். இவ்வாண்டில் 34 வேலையிட மரணங்கள் பதிவாகின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகம் கட்டுமானத் துறையுடன் தொடர்புடையவை.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

