சிங்கப்பூரில் எஃப் 1 பந்தயம் மீண்டும் நடைபெற உள்ளது. பந்தயம் நடைபெறும் அதே காலகட்டத்தில் 25 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக கொவிட்-19 நெருக்கடிநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் தொழில்துறை மீண்டும் உயிர்த்
தெழுகிறது. கொவிட்-19 காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டு
களாக சிங்கப்பூரில் எஃப் 1 பந்தயம் நடைபெறவில்லை. இவ்வாண்டு செப்டம்பர் 30லிருந்து அக்டோபர் 2 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஃப்1 பந்தயம் மீண்டும் களைகட்ட இருக்கிறது. 2019ஆம் ஆண்டில் திரண்ட கூட்டத்தைப் போலவே இவ்வாண்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பந்தய ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2019ஆம் ஆண்டில் எஃப் 1 பந்தயத்தைக் காண மொத்தம் 268,000 பார்வையாளர்கள் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் 300,000 பேரைப் பந்தயம் ஈர்த்தது. எஃப் 1 பந்தயம் நடைபெறும் காலகட்டத்தில் நிகழ இருக்கும் நிகழ்ச்சிகளில் மில்கன் கழக ஆசிய உச்சநிலை மாநாடும் ஒன்று. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள்,
வர்த்தக நிர்வாகிகள் முதலியோர்
கலந்துகொள்வர். இந்த மாநாடு இம்முறை அடுத்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து 30 தேதி வரை நடைபெறுகிறது.
இவ்வட்டார நாடுகளைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றி மாநாட்டில் கலந்துரையாடப்படும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றான எஃப்எச்ஏ-உணவு மற்றும் பான நிகழ்ச்சி அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தலைதூக்கியதை அடுத்து, இவ்வாண்டுதான் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் நேரில் கலந்துகொள்ள முடியும். வரும் திங்கட்கிழமையிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது. ஆனால் வருகையாளர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

