போர்ச் சூழலில் சுதந்திர தினத்தை அனுசரித்த உக்ரேன்; ரஷ்யத் தாக்குதல்களால் தொடரும் உயிர் பலி

போர்ச் சூழலில் சுதந்திர தினத்தை அனுசரித்த உக்ரேன்; ரஷ்யத் தாக்குதல்களால் தொடரும் உயிர் பலி

1 mins read
7aab56b6-415e-47a0-b708-104b8302bb7e
உக்ரேனின் செப்லின் நகரைக் குறிவைத்து ரஷ்யா பாய்ச்சிய ராக்கெட்டுகளுக்கு இரையாகி உருத்தெரியாமல் அழிந்த ரயில், வாகனங்கள். படம்: இபிஏ -

தங்களுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்தபோதிலும் உக்ரேனின் சுதந்திர தினத்தை அந்நாட்டு மக்கள் நேற்று முன்தினம் அனுசரித்தனர்.

இந்நிலையில், உக்ரேனில் உள்ள ரயில் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 பேர் மாண்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

கிழக்கு உக்­ரே­னில் ரஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் டொனெட்ஸ்க்­கி­லி­ருந்து 145 கிலோ­மீட்­டர் தூரத்­தில் இருக்­கும் சிறிய நக­ரான செப்­லி­னில் இருந்த ரயிலை ரஷ்­யா­வுக்­குச் சொந்­த­மான இரண்டு ராக்­கெட்­டு­கள் தகர்த்­தி­ய­காக அதி­பர் ஸெலென்ஸ்கி கூறி­னார்.

ரயி­லின் நான்கு பெட்­டி­கள் தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

முதலில் 22 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தலை­ந­கர் கியவுக்கு வடக்­குப் பகு­தி­யில் உள்ள விஸ்­கொ­ரோட்­டும் கடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னது. அவ்­வி­டத்­தைக் குறி­வைத்து ரஷ்­யப் படை­கள் ராக்­கெட் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­போ­தி­லும் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­ட­வில்லை என்று உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­தது.

உக்­ரே­னின் சுதந்­திர தினத்­தன்று ரஷ்ய வேண்­டு­மென்றே தூண்­டி­வி­டும் வகை­யில் தாக்­கு­தல்­களை நடத்­தும் என்று அதி­பர் ஸெலென்ஸ்கி ஏற்­கெ­னவே எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார். அது­மட்டு மல்­லாது, உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்று முன்தினத்­தோடு ஆறு மாதங்­கள் ஆகின்­றன.