முதிர்ச்சியடையா வட்டாரங்களில் முதல்முறை வீடு வாங்குவோருக்குக் கூடுதல் 'பிடிஓ' வீடுகள் ஒதுக்கப்படும்

முதிர்ச்சியடையா வட்டாரங்களில் முதல்முறை வீடு வாங்குவோருக்குக் கூடுதல் 'பிடிஓ' வீடுகள் ஒதுக்கப்படும்

1 mins read
3a73c2ba-0ec8-40e3-bcc9-2ef071168a1b
தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகள். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முதன்முறையாக வீடு வாங்குவோர் இனி முதிர்ச்சியடையா வட்டாரங்களில் அமையும் 'பிடிஓ' எனும் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீவக வீடுகளை மேலும் எளிதில் வாங்கலாம்.

ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

அத்திட்டத்திலிருந்து முதன்முறையாக வீடு வாங்குவோருக்கு முதிர்ச்சியடையா வட்டாரங்களில் கட்டப்படும் வீடுகள் கூடுதல் எண்ணிக்கையில் ஒதுக்கப்படும்.

முதிர்ச்சியடையா வட்டாரங்களில் அமையும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளில் நான்கறை அல்லது அதைவிடப் பெரிய வீடுகளில் குறைந்தது 95 விழுக்காட்டு வீடுகள் முதன்முறையாக வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் சனிக்கிழமையன்று (27 ஆகஸ்ட்) தெரிவித்தன.

இந்த விகிதம், இதற்கு முன்பு இருந்த 85 விழுக்காட்டைவிட அதிகம்.

முதிர்ச்சியடையா வட்டாரங்களில் உள்ள தேவைக்கேற்ப கட்டப்படும் மூன்றறை வீவக வீடுகளில் குறைந்தது 85 விழுக்காட்டு வீடுகள் முதன்முறையாக வாங்குவோருக்கு ஒதுக்கப்படும்.

இந்த விகிதமும் இதற்கு முன்பு இருந்த 70 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.