ஜெயா மரண அறிக்கை தமிழ்நாட்டு முதல்வரிடம் தாக்கல்

தமிழ்­நாட்­டின் முன்­னாள் முதல்­வரும் இந்திய அர­சி­ய­லில் இரும்பு தலைவி என்று வர்­ணிக்­கப்­பட்­ட­வரு­மான ஜெய­லலிதா மர­ணம் பற்றி கடந்த ஐந்­தாண்டு­களாக விசாரணை நடத்தி வந்த சிறப்பு ஆணை­யம் தன்­ அறிக்­கையை நேற்று தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லி­னி­டம் தாக்­கல் செய்­தது.

அந்த ஆணை­யத்­தின் தலை­வரான முன்­னாள் நீதி­பதி ஆறு­மு­க­சாமி, தான் தயா­ரித்த 608 பக்க தமிழ் அறிக்­கை­யும் 600 பக்­கங்­களைக் கொண்ட ஆங்­கில அறிக்­கை­யை­யும் நேற்று முதல்­வ­ரி­டம் ஒப்­ப­டைத்த பிறகு செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தார்.

"மொத்­தம் 154 பேரி­டம் விரி­வான விசா­ர­ணையை நடத்தி முடிவை அறிக்கை ரீதி­யில் முதல்­வ­ரி­டம் தாக்கல் செய்­து­விட்­டோம். அதை வெளி­யிடுவதா, இல்லையா என்­பது தமி­ழக அர­சைப் பொறுத்­தது," என்றார் ஆறு­மு­க­சாமி.

இத­னி­டையே, அந்த அறிக்கை நாளை அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் தாக்­கல் செய்­யப்­படும் என்று நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன. அதோடு, அது விரை­வில் சட்­ட­மன்ற விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படும் என்­றும் தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!