தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நொய்யரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்தியா யோசனை

2 mins read

உல­க­ளா­விய பீதியை ஏற்­ப­டுத்­தா­மல் உள்­நாட்டு பண­வீக்­கத்­தைக் குறைக்­கும் உத்­தி­யாக, நொய்­ய­ரிசி ஏற்­று­ம­திக்­குத் தடை­வி­திக்­கும் சாத்தி­யம் குறித்து இந்­தியா ஆராய்­கிறது.

இது நாட்­டின் அரிசி ஏற்­று­ம­தி­யில் 20 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­னது. இது உல­க­ளா­விய உணவு நெருக்­க­டியை மோச­மாக்­கும் என்­றா­லும் ஒட்­டு­மொத்­த­மாக அரிசி ஏற்­று­ம­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தை­விட நொய்­ய­ரி­சிக்கு மட்­டும் தடை­வி­திப்­பது தாக்­கத்­தைக் குறைக்கும்.

இந்­தி­யா­வில், இந்த அரிசி சமை­ய­லுக்­கும் கால்­நடை உண­வுக்­கும், எத்­த­னால் தயா­ரிப்­பிற்­கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

உல­கி­லேயே அதிக அள­வில் அரிசி ஏற்­று­மதி செய்­யும் நாடு இந்­தியா. உலக அள­வில் விற்­பனை செய்­யப்­படும் அரி­சி­யில் 40 விழுக்­காடு இங்­கி­ருந்து வரு­கிறது. கடந்த ஆண்டு 150 நாடு­க­ளுக்கு 17.71 மில்­லி­யன் டன் அரி­சியை இந்­தியா ஏற்­று­மதி செய்­துள்­ளது.

எனவே அதன் ஏற்­று­ம­திக் கொள்­கை­யில் ஏற்­படும் எந்த மாற்­ற­மும் அரிசி உண­வைப் பிர­தா­ன­மா­கக் கொண்­டி­ருக்­கும் பில்­லி­யன் கணக்­கான மக்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

2007-2008 உணவு நெருக்­க­டி­யின்­போது, ​​இந்­தியா அரிசி ஏற்று மதியை நிறுத்­தி­யது. வியட்­னாம் போன்ற பிற உற்­பத்­தி­யா­ளர்­களும் இந்­தி­யா­வைப் பின்­பற்றி ஏற்­று­ம­தியை நிறுத்­தின. இத­னால் ஏற்­பட்ட பீதி­யால் மக்­கள் அரி­சியை வாங்­கிச்சேர்க்க விரைந்­த­னர். அரிசி விலை ஒரு டன்­னுக்கு யுஎஸ்$1,000 (சிங்­கப்­பூர் வெள்ளி 1,400)க்கும் அதி­க­மாக ஏறி­யது. இது இப்­போ­துள்ள விலை­யை­விட இரண்டு மடங்கு அதி­க­மா­கும்.

அதி­க­ரித்து வரும் உல­க­ளா­விய பண­வீக்­கத்­தைச் சமா­ளிக்க இந்­தியா இந்த ஆண்டு சர்க்­கரை, கோதுமை ஏற்­று­ம­தியை கட்­டுப்­ப­டுத்­தி­யது.

நொய் அரிசி மீதான தடை­யால், இந்­தி­யா­வின் அரிசி ஏற்­று­ம­தி­யில் ஐந்­தில் ஒரு பங்கு மட்­டுமே பாதிக்­கப்­படும். அரிசி தீட்­டப்­ப­டும்­போது உடை­யும் அரிசி இது. இதன் விலை குறை­வாக இருப்­ப­தால், விலங்­குத் தீவ­னத்­துக்­காக சீனா­வும், சில ஏழை ஆப்­பி­ரிக்க நாடு­களும் இதனை இறக்­கு­மதி செய்­கின்­றன.

மோச­மான மழை, விளைச்­ச­லைப் பாதிக்­கும் மர்­ம­மான "குள்ள" நோய் கார­ண­மாக நெல் பயிர் செய்கை இந்த ஆண்டு இந்­தி­யா­வில் குறைந்­துள்­ளது. ஆகஸ்ட் முதல் வாரத்­தில் நெல் பயிர் செய்கை 13% குறைந்­துள்­ளது.

நாட்­டின் நெல் கொள்­மு­த­லில் 25 விழுக்­காட்டை உற்­பத்தி செய்­யும் உத்­த­ர­ப்பி­ர­தே­சம், பீகார், மேற்கு வங்­கா­ளம், ஜார்­கண்ட் ஆகி­யவை பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் அடங்­கும். விதைப்பு கால­மான ஜூன், ஜூலை மாதங்­களில் போதிய மழை இல்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத் தொடக்­கத்­தில் ஒரு மர்ம நோய் பரவி வளர்ச்­சியைக் குறைத்­தது. இதுகுறித்து அறி­வி­ய­லா­ளர்­கள் ஆய்வு மேற்­கொண்­டுள்­ள­தாக இந்­திய ஊடகங்­கள் தெரி­விக்­கின்­றன. ஒரு மதிப்­பீட்­டின்­படி 5% முதல் 15% பயிர்­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் எனத் தெரிகிறது.

கடந்த ஐந்­தாண்­டு­களில் இந்­தி­யா­வின் நெல் உற்­பத்தி உயர்ந்து வந்­துள்­ளது. கடந்த ஆண்டு சாத­னை­யாக 130.2 பில்­லி­யன் டன் உற்­பத்தி செய்­யப்­பட்­டது.

அனைத்­திந்­திய அரிசி ஏற்­று­மதி­யா­ளர்­கள் சங்­கம், கடந்த ஆண்டின் விளைச்சல், வரும் மாதங்­களில் நாடு முழு­வ­துக்­கும் போது­மா­னது என்று கூறி­யுள்­ளது.