செலவினங்களைக் குறைக்க ரணில் திட்டம்

செலவினங்களைக் குறைக்க ரணில் திட்டம்

2 mins read

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்­கல் செய்யவுள்ள இடைக்­கால வரவு செல­வுத் திட்டத்­தில் செல­வி­னங்­களைக் குறைக்க உள்­ளார் நிதி அமைச்­ச­ருமான அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்கே. வெள்­ளிக்­கி­ழமை வரை வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தம் நடை­பெ­றும்.

நிதி நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் இலங்கை அனைத்­து­லக பண நிதி­யத்­தில் கடன் வாங்க பேச்­சு­வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலை­யில் இந்த இடைக்­கால வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது.

பயணத்­து­றை­யை பெருமளவு சார்ந்­துள்ள இலங்கை 1948இல் சுதந்­தி­ரம் பெற்ற பிறகு, மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டியை தற்­போது எதிர்­கொண்டுள்ளது.

ஜூலை மாதம் நடந்த மக்­கள் போராட்­டத்­தில், கோத்­த­பாய ராஜ பக்சே அதி­பர் பத­வி­யில் இருந்து அகற்­றப்­பட்­ட­தைத் தொடர்ந்து அதி­பர் பதவியை ஏற்ற ரணில் விக்கி­ர­ம­சிங்கே, இடைக்­கால வரவு செல­வுத் திட்­டம், அனைத்­து­லக பண நிதி­யத்­து­டன் உடன்­பாடு செய்­யப்­பட்ட நிதி ஒருங்­கி­ணைப்பு நட­வடிக்­கை­களில் கவ­னம் செலுத்­தும் என்று கூறி­யுள்­ளார்.

மக்­கள் நல்வாழ்­வுக்­கும் கடன்­களுக்­கான வட்­டியை திருப்பி செலுத்­து­வ­தற்­கும் பாது­காப்பு உள்ட பல செல­வி­னங்­கள் "சில நூறு பில்­லி­யன்" ரூபாய்­க­ளாகக் குறைக்­கப்­படும் என்றும் கூறி­னார்.

மின்­வெட்டு மற்­றும் எரி­பொ­ருள், உணவு, மருந்­து­கள் போன்ற அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளின் தட்­டுப்­பா­டு­க­ளி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு இடைக்­கால வர­வு­செ­ல­வுத் திட்­டம் மூலம் நிவா­ர­ணம் வழங்க ஆர்­வ­மாக உள்­ள­தா­க­வும் ரணில் தெரி­வித்­துள்­ளார்.

நவம்­ப­ரில் தாக்­கல் செய்­யப்­பட்ட வரவுசெல­வுத் திட்­டத்­தில் இலங்கை 3.9 டிரில்­லி­யன் ரூபாய் (S$15.1 பில்­லி­யன்) செல­வி­னத்தை இலக்­காகக் கொண்­டி­ருந்­தது.

"இடைக்­கால பட்ஜெட் 2022க்கான 9.9% பற்­றாக்­கு­றையை இலக்­கா­கக் கொண்­டி­ருக்­கும். இது முந்­தைய 12%ஐவிட குறை­வாக இருக்­கும்," என்று முத­லீட்டு நிறு­வ­ன­மான ஏசியா செக்­யூ­ரிட்­டி­ஸின் மேக்ரோ பொரு­ளா­தார நிபு­ணர் லக்ஷினி பெர்­னாண்டோ கூறி­னார்.