குறைந்தபட்ச ஊதியம் $1,400

குறைந்தபட்ச ஊதியம் $1,400

2 mins read

குறைந்த வருமானம் ஈட்டும் 159,000 உள்ளூர் ஊழியர்கள் பயன்பெறுவர்

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் முழு நேர உள்­ளூர் ஊழி­யர்­கள் 159,000 பேர் இன்­று­மு­தல் குறைந்­த­பட்ச மாத ஊதி­ய­மாக $1,400 பெறு­வர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு வைத்­தி­ருக்­கும் நிறு­வனங்­கள், படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யின்­கீழ் வராத தங்­களது உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு குறைந்­தது $1,400 ஊதி­யம் வழங்க வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு ஓர் அறிக்­கை­மூ­லம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் இரண்டு ஊதிய மாற்­றங்­கள் இன்­று­மு­தல் நடப்­பிற்கு வரு­கின்­றன.

அவற்­றுள் முத­லா­வது, சில்­லறை விற்­ப­னைத் துறை­யைச் சேர்ந்த குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கான படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை. இதன்­மூ­லம் ஏறக்­கு­றைய 19,000 முழுநேர ஊழி­யர்­கள் பய­ன­டை­வர்.

இது­கு­றித்த அறி­விப்பு கடந்த மாதம் 15ஆம் தேதி வெளி­யா­னது.

இரண்­டா­வ­தாக, துப்­பு­ரவு, பாது­கா­வல் மற்­றும் நில­வ­னப்­புத் துறை­களைச் சேர்ந்த 19,000 உள்­ளக ஊழி­யர்­க­ளுக்­கும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை நீட்­டிக்­கப்­படும்.

இப்­போ­தைக்கு, அத்­து­றை­களில் பணி­யாற்­றும் வெளி­நி­று­வனங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­களுக்கு மட்­டுமே அம்­முறை நடப்­பில் இருக்­கிறது.

ஒட்­டு­மொத்­தத்­தில், இன்­று­முதல் நடப்­பிற்கு வரும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை திட்­டத்­தின்­மூ­லம் ஏறத்­தாழ 197,000 முழு­நேர குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் பல­ன­டை­வர்.

மனி­த­வள அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள வேலை விவரங்களின் அடிப்­படை­யில் தங்­கள் ஊழி­யர்­கள் படிப்­படி­யான சம்­பள உயர்வு முறை­யின்­கீழ் வரு­கி­றார்­களா என்­பதை நிறு­வனங்­கள் மதிப்­பிட வேண்­டும்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யின்­கீழ் தங்­கள் ஊழி­யர்­களின் வேலைப் பொறுப்­பு­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் மனி­த­வள அமைச்­சின் தொழில்­சார் வேலை­வாய்ப்பு தர­வுத்­தொ­குப்பு இணை­ய­வா­யி­லில் தாக்­கல் செய்ய வேண்­டும்.

இம்­மா­தத்­தில் இருந்து அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் வரை­யிலும், பல்­வேறு படிப்­ப­டி­யான சம்­பள உயர்­வுத் தேவை­கள் குறித்து நிறு­வ­னங்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­பதில் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் கவ­னம் செலுத்­து­வர்.

மாற்­றங்­க­ளைச் செய்­ய­வும் விதி­மு­றை­க­ளுக்கு இணங்­க­வும் நிறு­வனங்­க­ளுக்­குக் கால அவ­கா­சம் வழங்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

இடைப்­பட்ட காலகட்டத்தில் விதி­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்­காத நிறு­வ­னங்­கள்­மீது அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, இன்­னும் அதி­க­மான துறை­க­ளுக்­குப் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை விரி­வு­படுத்­தும் சாத்­தி­யம் தொடர்­பில் உரிய பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து என்­டி­யுசி ஆராய்ந்து வரு­கிறது என்று மரின் பரேட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஃபாமி அலி­மன் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

வெளி­நாட்டு மனி­த­வ­ளத்­தைச் சார்ந்­தி­ருப்­ப­தைக் குறைக்க தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வதை அதி­க­ரித்­தும் ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­தி­யும் உற்­பத்­தித்­தி­ற­னைக் கூட்ட வேண்டும் என்று நிறு­வ­னங்­களை ஊக்­கு­வித்து வருவதாக சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஓர் அறிக்­கை­மூ­லம் தெரி­வித்­து இருக்கிறது.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களைக் கைதூக்­கி­விட ஒட்­டு­மொத்த சமூக அணு­கு­முறை தேவைப்­ப­டு­கிறது என்­றும் தேசிய முதலாளிகள் சம்மேளனம் குறிப்­பிட்­டது.