ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓர் இந்தியர்

ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓர் இந்தியர்

1 mins read
f706ea48-aec3-48d9-9a4a-cc1ec59ccd59
திரு லக் ஷ்மன் லண்டனிலிருந்து சியேட்டலுக்குச் சென்று தம் புதுப் பொறுப்பை ஏற்பார். படம்: இணையம் -

அனைத்­து­லக அள­வில் புகழ்­பெற்ற நிறு­வ­ன­மான 'ஸ்டார்­பக்ஸ் கார்­ப­ரே­ஷன்' முதல்­மு­றை­யாக ஓர் இந்­திய வம்­சா­வ­ளியினரை அதன் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­கத் தேர்­வு­செய்­துள்­ளது.

காப்பி ஜாம்­ப­வா­னாக திக­ழும் ஸ்டார்­பக்ஸ் நிறு­வ­னத்­தில் அடுத்த மாதம் முதல் தேதி­யி­லி­ருந்து 55 வயது லக்­‌ஷ்­மன் நர­சிம்­மன் இணை­வார். அறி­மு­கக் காலத்­தில் நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­க­ளைப் பற்றி அறிந்த பிறகு, அவர் அடுத்த ஆண்டு ஏப்­ரல் 1 முதல் முழு­மை­யா­கத் தலை­மைப் பொறுப்பை ஏற்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

அந்­நி­லை­யில், ஸ்டார்­பக்ஸ் நிறு­வ­னத்­துக்­கான திட்­டங்­களை வகுத்து வந்த ஹவர்ட் ஷுல்ட்ஸ், 69, தமது தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து விலகி ஆலோ­ச­க­ரா­கப் பொறுப்­பேற்­பார். பய­னீட்­டா­ளரை மைய­மாகக் கொண்ட தொழில்­து­றை­யில் பல ஆண்­டு­கால அனு­ப­வ­முள்­ள­வ­ராக திரு லக்­‌ஷ்­மன் கரு­தப்­ப­டு­கிறார். 'ரெக்­கிட் பென்­கி­ஸர்' நிறு­வ­னத்­தில் இவர் செப்­டம்­பர் 2019 முதல் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக இருந்­தார்.

அதற்­கு­முன், அருந்­து­வ­தற்­குத் தயார்­நி­லை­யில் உள்ள பானங்­களை விற்­பனை செய்­யும் ஸ்டார்­பக்ஸ் பங்­காளி நிறு­வ­ன­மான 'பெப்­சிகோ இன்க்'ல் நிர்­வா­கி­யாக இருந்­தார். 'மெக்­கின்சி & கோ' ஆலோ­சனை நிறு­வ­னத்­தி­லும் பணி­யாற்­றி­யுள்­ளார்.

இந்நிலையில், வரு­டாந்­திர அடிப்­ப­டைச் சம்­ப­ள­மாக திரு லக்­‌ஷ்­ம­னுக்கு $1.3 மில்­லி­யன் வழங்­கப்­பட உள்­ள­தாக புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னம் அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.