2ம் முனையத்திலிருந்து தென்கிழக்காசியாவுக்கு எஸ்ஐஏ சேவைகள்

2ம் முனையத்திலிருந்து தென்கிழக்காசியாவுக்கு எஸ்ஐஏ சேவைகள்

2 mins read
d0e6cacd-29ae-4c86-8891-1de7b0ffe4cf
இரண்டாம் முனையத்தின் தெற்குப் பகுதியில் வருகைதரும் பயணிகளுக்கான சேவைகள் கடந்த மே 29ஆம் தேதியில் இருந்து படிப்படியாக மீண்டும் தொடங்கியுள்ளன. படம்: சாவ்பாவ் -

சாங்கி விமான நிலை­யத்­தின் இரண்­டாம் முனை­யம் ஈராண்­டுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக அடுத்த மாதம் மீண்­டும் திறக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது. தென்­கி­ழக்­கா­சிய நக­ரங்­களுக்­குச் சேவை வழங்­கும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள் அனைத்­தும் அதன்­பி­றகு இரண்­டாம் முனை­யத்­தில் இருந்தே கிளம்­பும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முதற்­கட்­ட­மாக, மலே­சியா, தாய்­லாந்து ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­லும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள், அடுத்த மாதம் 11ஆம் தேதி­யன்று மூன்­றாம் முனை­யத்­தி­லி­ருந்து இரண்­டாம் முனை­யத்­தின் தெற்­குப் பிரி­வுக்கு மாற்­றப்­படும். தென்­கி­ழக்­கா­சி­யா­வின் மற்ற நக­ரங்­க­ளுக்­கான விமா­னச் சேவை­கள் அனைத்­தும் அக்­டோ­பர் 13ஆம் தேதி இரண்­டாம் முனை­யத்­திற்கு மாற்­றப்­படும்.

அதைத் தொடர்ந்து, ஏர் இந்­தியா, ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் ஆகிய நிறு­வ­னங்­க­ளின் விமா­னச் சேவை­கள், அடுத்த மாதம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து இரண்­டாம் முனை­யத்­தில் இருந்து கிளம்­பும் என்று கூறப்­பட்­டது.

சாங்கி விமான நிலை­யத்­தின் இரண்­டாம் முனை­யத்­தைப் பயன்­படுத்­தும் விமான நிறு­வ­னங்­க­ளின் முழுப் பட்­டி­யல் விரை­வில் வெளி­யி­டப்­படும் என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் தெரி­வித்­தது.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்பே இரண்­டாம் முனை­யத்­தின் புதுப்­பிப்­புப் பணி­கள் குறித்து குழு­மம் அறி­வித்­தி­ருந்­தது. ஆண்­டுக்கு ஐந்து மில்­லி­யன் கூடு­தல் பய­ணி­களைக் கையா­ளும் அள­விற்கு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வது இலக்கு. அடுத்த மாதத்­தி­லி­ருந்து முனை­யத்­தின் 50 விழுக்­காட்­டுப் பகுதி செயல்­ப­டத் தொடங்­கும் என்று குழு­மம் கூறி­யது.

முனை­யத்­தின் தெற்­குப் பகு­தி­யில் வந்­த­டை­யும் பய­ணி­கள் பய­ணப்­பெட்­டி­களை மீண்­டும் பெற்றுக்­கொள்­வ­தற்­கான நடை­மு­றை­கள், கடந்த மே மாத இறு­தி­யில் இருந்து படிப்­ப­டி­யா­கச் செயல்­ப­டத் தொடங்­கி­ன. முனை­யத்­தின் வடக்­குப் பகு­தி­யில் புதுப்­பிப்­புப் பணி­கள் 2024ஆம் ஆண்டு நிறை­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­னர் சாங்கி விமான நிலை­யத்­திற்கு ஓராண்­டில் ஏறக்­கு­றைய 70 மில்­லி­யன் பய­ணி­கள் வந்­து­சென்­ற­னர்.

தற்­போது கிரு­மிப்­ப­ர­வல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில், அந்த எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தட்ட 58 விழுக்­காட்­டுப் பயணி­கள் வந்­து­செல்­வ­தா­கக் கூறப்­படுகிறது. விமா­னச் சேவை­க­ளின் எண்­ணிக்கை ஏறத்­தாழ 67 விழுக்­காட்டை எட்­டி­யுள்­ளது.

புதுப்­பிக்­கப்­பட்ட இரண்­டாம் முனை­யத்­தில் இட­வ­சதி அதி­கம் என்­ப­து­டன் பய­ணி­க­ளைக் கவ­ரும் வகை­யில் இயற்கை சார்ந்த வடி­வமைப்­பு­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக சாங்கி விமான நிலை­யக் குழு­மம் தெரி­வித்­தது.