உலக சிரமச் சூழலில் சிங்கப்பூர்- மலேசிய ஒத்துழைப்பு முக்கியம்

உலக சிரமச் சூழலில் சிங்கப்பூர்- மலேசிய ஒத்துழைப்பு முக்கியம்

2 mins read
0c4e0c80-8c1c-41aa-a874-3d96ba41b809
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாவுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா (இடது), இஸ்தானா நெகாராவில் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்தார். படம்: பெர்னாமா -

நிச்­ச­ய­மற்ற உல­கச் சூழ்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தொடர்ந்து நெருக்­க­மாக இணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று கூறி­யுள்­ளார்.

இரு நாடு­களும் பல துறை­களில் உயர்­நி­லை­யில் ஒன்­றை­யொன்று சார்ந்­துள்­ளன. இரு­நா­டு­க­ளின் உறவு, அணுக்­க­மான மக்­கள், குடும்ப உற­வு­களை அடித்­த­ள­மா­கக்கொண்­டது என்றார் அவர்.

மலே­சி­யா­வுக்கு மேற்­கொண்ட நான்கு நாள் பய­ணத்­தின் முடி­வில் சிங்­கப்­பூர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசினார் திரு வோங்.

மலே­சிய அமைச்­சர்­க­ளு­ட­னான தனது உற­வு­களை வலுப்­ப­டுத்த இந்­தப் பய­ணம் ஒரு வாய்ப்பு என்றார் திரு வோங். சிங்­கப்­பூர் அதன் தலை­மைத்­துவ மாற்­றத்தை மேற்­கொண்டு வரும் நிலை­யில் இரு­நாட்டு உறவை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­க­ளைத் தொடர்ந்து கண்­ட­றி­யும் என்­றும் கூறி­னார்.

எரி­சக்தி, உணவு, பொரு­ளி­யல் மந்­த­நிலை, பண­வீக்­கம் ஆகி­ய­வற்­று­டன் இரு நாடு­களும் புதிய உலகச் சூழ்­நி­லையை எதிர்­கொள்­வ­தால் இரு­த­ரப்பு உறவு மேலும் முக்­கி­யத்­து­வம் பெறும் என்­றார் அவர்.

"கடந்த 30 ஆண்­டு­களில் நாம் அனை­வ­ரும் அனு­ப­வித்த உல­க­ம­ய­மாக்­க­லின் பொற்­கா­லம் அநே­க­மாக முடிந்­து­விட்­டது, மேலும் நாம் ஒரு புதிய சகாப்­தத்­தில் நுழை­கி­றோம். இது அதி­கம் புவி­சார் அர­சி­யல் சூழ­லால் ஆனது. மேலும் உல­கப் பொரு­ளி­யல் இன்­னும் சித­றக்­கூ­டும்," என்று திரு வோங் கூறி­னார்.

நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங், ஜூன் மாதம் துணைப் பிர­த­ம­ரா­கப் பத­வி­யேற்ற பிறகு மலே­சி­யா­வுக்கு மேற்­கொண்ட முதல் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் இது.

நெருங்­கிய அண்டை நாடு­கள் என்ற முறை­யில் அவ்­வப்­போது பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­தது.

"எனி­னும், நட்பு, இரு நாடு­களுக்கு இடை­யே­யும் தனிப்­பட்ட நிலை­யில் உள்ள நெருங்­கிய உற­வு­கள் கார­ண­மாக, வேறு­பா­டு­களை வெளிப்படையாக விவா­திக்க முடி­கிறது," என்­றார் அவர்.

மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷாவை நேற்று சந்­தித்­த துணைப் பிரதமர், இரு நாடு­க­ளுக்­கும் இடையி­லான அன்­பான, நீண்டகால, பன்­முக உறவை மறுஉறு­திப்­ப­டுத்­தி­னார்.

மலே­சியா, சிங்­கப்­பூர் இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று உறு­து­ணை­ யாக இருந்து, பரஸ்­பர நன்­மைக்­காக சமூக உற­வு­கள், வர்த்­த­கம், முத­லீடு ஆகி­ய­வற்றை ஆக உய­ரிய நிலைக்கு வலுப்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்று மாமன்­னர் கூறி­னார்.

இம்­மா­தப் பிற்­ப­கு­தி­யில் மாமன்­ன­ரின் பய­ணத்தை சிங்­கப்­பூர் எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக திரு வோங் கூறி­னார்.

இரு நாடுகளுக்கிடையிலான இணைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களை இருதரப்­பும் ஆராய்ந்து வரு­வ­தாகக் கூறிய அவர், உட்­லண்ட்ஸ், ஜோகூர் பாரு இடையே யான ஆர்­டி­எஸ் திட்­டத்­தின் நிறைவை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

மின்னிலக்கம், பசுமைப் பொருளியலில் ஒத்துழைப்பு மற்றும் சிங்கப்பூரின் பேநவ், மலேசியாவின் டூயட்நவ் கட்டண முறைகளை இணைப்பது குறித்தும் விவாதித்து வருகின்றனர். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை நேற்றுமுன்தினம் திரு வோங் சந்தித்தார்.