2023ல் மேலும் 2,500 பாலர் பள்ளி இடங்கள்

2023ல் மேலும் 2,500 பாலர் பள்ளி இடங்கள்

2 mins read

மக்­கள் செயல் கட்சி சமூக அற­நிறு­வ­னம் (பிசி­எஃப்) நடத்­தும் பாலர்­பள்­ளி­களில் அடுத்த ஆண்டு இறுதி வாக்­கில் புதி­தாக சுமார் 2,500 இடங்­கள் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும். இந்த இடங்­கள் பிடா டாரி, தெம்­ப­னிஸ் நார்த் போன்ற தேவை அதி­க­மாக இருக்­கும் இடங்­களில் கிடைக்­கும்.

அதோடு மட்­டு­மின்றி, இந்த அற­நி­று­வ­னத்­தின் 320 ஸ்பாக்கல் டாட்ஸ் நிலை­யங்­க­ளி­லும் சிறப்­புச் செயல்­திட்­டம் ஒன்று நடை­மு­றைப்­படுத்­தப்­படும். இதன் ஒரு பகு­தி­யாக, 36,000க்கும் மேற்­பட்ட சிறார்­களுக்கு வியூக சிந்­த­னைத் திற­னும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கும் தேர்ச்சி­களும் கற்று கொடுக்­கப்­படும்.

இந்­தச் செயல்­திட்­டம் 2024ஆம் ஆண்­டு­வாக்­கில் தொடங்கும்.

மசெக சமூக அற­நி­று­வ­னம் ஓர் அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தது. இந்த அற­நி­று­வ­னம், ஸ்டெமி என்று சுருக்­க­மா­கக் குறிப்­பி­டப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம், புத்­தாக்­கம், தொழில் முனைப்புச் செயல்­திட்­டம் ஒன்றை கடந்த ஜன­வரி மாதம் அறி­வித்­தது.

இந்­தத் திட்­டத்­தில் இப்­போது 13,500 சிறார்­கள் பல­ன­டை­கி­றார்கள். இது கிட்­டத்­தட்ட 50,000 சிறார்­கள் பல­ன­டை­யும் வகை­யில் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றும் அற­நி­று­வ­னம் அறி­வித்து இருக்­கிறது.

இவை எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, மக்­கள் செயல் கட்­சி­யின் சமூக அறப்­பணி அமைப்­பான அந்த நிறு­வ­னம், அடுத்த ஐந்­தாண்­டு­களில் மேலும் பல முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை அமைக்க இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இத்­த­கைய நிறு­வ­னங்­கள் எத்­தனை புதிதாக அமைக்­கப்­படும் என்­பது தெரி­ய­வில்லை. இருந்­தாலும் புக்­கிட் பாஞ்­சாங் பகு­தி­யில் 2024 அல்­லது 2025ஆம் ஆண்­டில் அந்த அற­நி­று­வ­னம் தன்­னு­டைய எட்­டா­வது முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தைத் திறப்­ப­தற்­கான திட்­டங்­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது.

பிசி­எஃப் சமூக அற­நி­று­வனம், 360 பாலர்­பள்­ளி­களை நடத்து­கிறது. அவற்­றில் 40,000 சிறார்­கள் பயில்­கி­றார்­கள். கிட்­டத்­தட்ட 870 முதி­யோர்­க­ளு­டன்­ கூ­டிய ஏழு முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளை­யும் அது நடத்­து­கிறது.

பாலர்­ பள்­ளி­களில் பல­வற்­றையும் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஆற்­றல் சிறார்­க­ளி­டம் வேறு­பட்டு இருக்­கும்.

அவர்­கள் அனை­வ­ருக்­கும் ஒரே வாய்ப்­பு­களை அளிக்­கும் வகை­யில், இந்த அற­நி­று­வ­னத்­தின் 260 பாலர்­பள்­ளி­களில் குறைந்­த­பட்­சம் ஓர் ஊழி­ய­ருக்­குப் பயிற்சியளிக்­கப்­படும்.

அவர், 2023 தொடக்க வாக்­கில் ஒரு­ங்கிணைப்பாள­ரா­கச் செயல்­பட்டு உதவி தேவைப்­ப­டக்­கூ­டிய சிறார்­களை அடை­யா­ளம் கண்டு அவர்­களுக்கு உதவி கிடைக்க ஏற்­பாடு­களைச் செய்­வார்.

சிங்­கப்­பூர் விலங்­கியல் தோட்டத்தில் நேற்று பிசி­எஃப் சமூக அற­நி­று­வனத்­தின் வரு­டாந்­திர குடும்ப தினம் நடந்­தது. அதில் 1,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்­டார்­கள்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நிகழ்ச்­சி­யில் உரை­யாற்றி னார். மசெக சமூக அற­நி­று­வன பாலர்­பள்­ளி­யில் தான் படித்­த­தா­கத் தெரி­வித்த அவர், வருங்­கா­லத்­தில் அந்த அற­நி­று­வ­னத்­தின் முதி­யோர் பரா­மரிப்பு நிலை­யத்­தில் சேர வேண்டிய நிலை தமக்கு வந்­தா­லும் வர­லாம் என்­றார்.

"என்­ வாழ்வின் தொடக்­கத்­திலும் பிற்­ப­கு­தி­யி­லும் என்­னு­டனே இந்தச் சமூக அற­நி­று­வ­னம் எப்­போ­துமே சேர்ந்­தி­ருக்­கும் என்­பது எனக்­குத் தெரி­யும்," என்­றார் அவர்.