வேன் சறுக்கியதால் விபத்து: ஓட்டுநர் பலியானார்

வேன் சறுக்கியதால் விபத்து: ஓட்டுநர் பலியானார்

1 mins read
fa24bad2-2b14-48f3-938b-616e49589ebb
விபத்தில் சிக்கிய இந்த வாகனத்தின் 28 வயது ஓட்டுநர் அதே இடத்தில் மரணம் அடைந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அறிவித்தது. படங்கள்: ஷின் மின் டெய்லி -

தீவு விரை­வுச்சாலை­யில் நேற்று அதி­காலை நேரத்­தில் நிகழ்ந்த சாலை விபத்­தில் 28 வயது வாகன ஓட்­டு­நர் மாண்­டு­விட்­டார்.

கிள­மெண்டி அவென்யூ 6க்குள் செல்­லும் துணைச்­சா­லை­யில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி தங்­களுக்­கு அதி­காலை 6 மணிக்குத் தகவல் கிடைத்­த­தாக காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் தெரி­வித்­தன.

அந்த வேன் வாக­னம் சறுக்­கிக் கொண்டு ஓடி சாலைத் தடுப்பை உடைத்து விபத்­துக்­குள்­ளா­கி­விட்­டது என்று நம்­பப்­ப­டு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

காவல்­து­றை­யின் புலன்­விசாரணை தொடர்­கிறது.

இத­னி­டையே, கெப்­பல் ரோடும் கேன்­டோன்­மண்ட் லிங்­கும் சந்­திக்கும் இடத்­தில் சனிக்­கி­ழமை இரவு நேரத்­தில் நிகழ்ந்த சாலை விபத்­தில் காய­ம­டைந்த ஆறு பேர் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர்.

அவர்­களில் ஒரு­வர் கம்­ஃபர்ட்­டெல்­குரோ டாக்சி ஓட்­டு­ந­ரான 50 வயது ஆட­வர். அவருக்கு காலிலும் நெஞ்­சி­லும் காய­ங்கள் ஏற்பட்டன.

ஒரு டாக்­சி­யும் காரும் சம்­பந்­தப்­பட்ட இந்த விபத்து பற்றி சனிக்­கி­ழமை இரவு சுமார் 8.15 மணிக்­குத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­து­றை­யும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் தெரி­வித்­தன.

காய­ம­டைந்­த­வர்­களில் டாக்­சி­யில் இருந்த இதர நான்கு பய­ணி­களும் அடங்­கு­வர். அவர்­க­ளு­டன் 55 வயது வாகன ஓட்­டு­நர் ஒரு­வரும் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

தன் டாக்சி ஓட்­டு­ந­ருக்­கும் பய­ணி­க­ளுக்கு கம்­ஃபர்ட் டெல்­குரோ நிறு­வ­னம் உதவி வரு­கிறது. காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.