அமைச்சர் சண்முகம்: வெளிநாடுகளில் தெரியாமல் போதைப்பொருள் உட்கொள்வது பொதுவாக குற்றமாக வகைப்படுத்தப்படாது

வெளிநாடுகளில் தெரியாமல் போதைப்பொருள் உட்கொள்வது பொதுவாக குற்றமாக வகைப்படுத்தப்படாது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் தாய்லாந்தில் கஞ்சா சேர்க்கப்பட்டுள்ள பொருள்களை வாங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தால் அது குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தும் என்று திரு சண்முகம் எழுத்து வடிவில் தெரிவித்தார்.

வேண்டுமென்றே போதைப்பொருளை உட்கொள்ளாதது தெரியவந்தால் அது குற்றமாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்தில் கஞ்சா உட்கொள்வது சட்டவிரோதமான செயல் அல்ல என்று இவ்வாண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

தாய்லாந்து, அவ்வாறு செய்துள்ள முதல் ஆசிய நாடு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!