செகந்திராபாத் தீ; குறைந்தது எட்டு பேர் மரணம்

செகந்திராபாத் தீ; குறைந்தது எட்டு பேர் மரணம்

1 mins read
ce1b9a00-b3d8-41f8-a393-4603114704e7
செகந்திராபாத் உள்ள ரூபி ஹோட்டலில் தீ மூண்டது. படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் -

இந்தியாவின் செகந்திராபாத் நகரில் ஹோட்டல் ஒன்றின் கீழ்த்தளத்தில் மூண்ட தீயால் குறைந்தது எட்டு பேர் மாண்டனர்.

'ஷோரூம்' எனும் காட்சி அறையில் நிகழ்ந்த அசம்பாவிதத்தால் மேலும் சுமார் 13 பேர் காயமடைந்தனர்.

மாண்டோரில் சிலர் ஹோட்டல் அறைகளில் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது தீக்காயங்களுக்கு ஆளாகி மரணமடைந்தனர்.

முதலில் ஏழு பேர் மாண்டதாக தகவல்கள் வெளியாயின.

அதற்குப் பிறகு மேலும் ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளாகி மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மின்சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்த ரூபி ஹோட்டலின் காட்சி அறையில் 'ஷார்ட் சர்க்கிட்' எனப்படும் தவறான பாதையில் மின்சாரம் ஓடும் நிலை ஏற்பட்டதால் இந்திய நேரப்படி திங்கட்கிழமை (12 செப்டம்பர்) இரவு சுமார் ஒன்பது மணிக்குத் தீ மூண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

சிறிது நேரத்தில் காட்சி அறை முழுவதும் தீப்பிடித்துக்கொண்டது.

மின்சைக்கிள்கள் ஒவ்வொன்றாக வெடித்தன.

குறைந்தது 25 பேர் தங்கியிருந்த காட்சி அறைக்கு மேல் இருக்கும் பகுதிக்கும் தீ பரவியது.