கொவிட்-19ஐ சமாளிக்க $72.3 பி. செலவானது

கொவிட்-19ஐ சமாளிக்க $72.3 பி. செலவானது

3 mins read

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கடந்த இரண்டு நிதி ஆண்­டு­களில் கொவிட்-19 கொள்­ளை­நோ­யைச் சமா­ளிக்க $72.3 பில்­லி­ய­னைச் செல­விட்­டி­ருப்­ப­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இந்­தத் தொகை­யில் பொது சுகா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக $13.4 பில்­லி­ய­னும் ஊழி­யர்­க­ளுக்­கும் முத­லா­ளி­க­ளுக்­கும் ஆத­ரவு நல்­கு­வ­தன் மூலம் வேலை­க­ளைப் பாது­காக்க $50.6 பில்­லி­ய­னும் செல­வி­டப்­பட்­ட­தாக நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்திராணி ராஜா நேற்று மன்­றத்­தில் கூறி­னார்.

இவற்­று­டன், நேர­டி­யாக குடும்­பங்­க­ளுக்­கும் சமூக ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் $8.3 பில்­லி­யன் செல­வி­டப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்­தத் தொகை அனைத்­தும் 2020 மற்­றும் 2021 நிதி ஆண்­டு­களில் செல­வி­டப்­பட்­ட­தா­கக் கூறிய அவர், இரண்டு முக்­கிய கார­ணங்­க­ளுக்­காக அர­சாங்­கம் முன்­ன­தா­கக் கடப்­பாடு கொண்­டி­ருந்த $100 பில்­லி­ய­னுக்­கும் குறை­வாக இந்த செல­வு­கள் அமைந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

"முதல் கார­ணம், இறுக்­க­மான கடன் சந்­தையை எதிர்­பார்த்து 2020ஆம் நிதி ஆண்­டில் அர­சாங்­கம் தொடக்­க­மாக கடன் மூல­த­னத்தை ஒதுக்­கி­யது.

"சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­கான சிங்­கப்­பூர் நாண­யக் கடன் வச­தித் திட்­டத்­தின்­கீழ், பங்­கு­பெ­றும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் குறைந்த வட்­டி­யி­லான மூல­த­னத்தை வழங்­கி­யி­ருந்­த­தால் இந்­தக் கடன் மூல­தன ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.

"இரண்­டா­வது கார­ணம், பொது சுகா­தா­ரச் செல­வி­னத்­தில் குறை­வான பய­னீடு. இறங்கு

முகம் ஏற்­படும் சாத்­தி­யத்­தைச் சமா­ளிக்க வளங்­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன. இருப்­பி­னும், பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளா­லும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒத்­து­ழைப்­பா­லும் இறங்­கு­முக நில­வ­ரம் தவிர்க்­கப்­பட்­டது.

"அத்­த­கைய குறை­வான பய­னீட்டு அம்­சம் கூடு­தல் நிதி­ய­ளிப்பு மூலம் சரிக்­கப்­பட்­டப்­பட்­டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்­பர் மாதம் வரை­யி­லான, விழிப்­பு­நிலை உயர்த்­தப்­பட்ட கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் அறி­விக்­கப்­பட்ட உத­வித்­தொ­குப்­பின் நிதியே அது," என்று குமாரி இந்­தி­ராணி விளக்­கி­னார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் திரு­வாட்டி ஃபூ மீ ஹார் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு பதி­ல­ளித்­துப் பேசுகையில் அவர் இந்த விவரங் களை அளித்தார்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நிதி அமைச்­ச­ராக இருந்­த­போது 2020ஆம் ஆண்டு ஐந்து வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­களை வெளி­யிட்­டார். அவற்­றில் கொவிட்-19 சமா­ளிப்பு செலவு­ க­ளுக்­காக $100 பில்­லி­யன் கடப்­பாட்டை அவர் அறி­வித்­தி­ருந்­தார். இதில் பாதிக்­கும் மேற்­பட்ட தொகை அர­சாங்­கத்­தின் கடந்­த­கால நிதி சேமிப்­பி­லி­ருந்து எடுக்­கப்­படும் என்று அப்­போது எதிர்­பார்க்­கப்­பட்­டது.

மொத்­த­மாக $52 பில்­லி­யனை சேமிப்­பி­லி­ருந்து எடுக்­கத் தொடக்­கத்­தில் திட்­ட­மி­டப்­பட்டு இருந்­தது.

ஆயி­னும், கடந்த பிப்­ர­வரி மாதம் இவ்­வாண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்த தற்­போ­தைய நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், 2020 முதல் 2022 வரை­யி­லான மூன்று நிதி ஆண்­டு­க­ளுக்­கும் சேர்த்து $42.9 பில்­லி­யன் மட்­டுமே எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­

வ­தா­கக் கூறி­னார்.

இதற்­கி­டையே, கொவிட்-19 கொள்­ளை­நோ­யி­லி­ருந்து பொதுத் துறை அமைப்­பு­கள் பாடங்­களை வரைந்­து­கொண்டு, அவ­ச­ர­கா­லத்­திற்­கான நிதி நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­தும் என்று குமாரி இந்­தி­ராணி தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தி­ல் கொள்­ளை­நோய் தொடர்­புடைய கொள்­மு­தல் மற்­றும் செல­வி­னங்­கள் மீதான கட்­டுப்­பா­டு­க­ளை­யும் சோத­னை­க­ளை­யும் நிதி அமைச்சு மறு­ஆய்வு செய்­யத் தொடங்­கி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"தவ­றாகத் தொகையளிக்கப்பட்டதா என்­ப­தை­யும் பரி­வர்த்­த­னை­கள் நேர்­மை­யாக நடை­பெற்­று­உள்­ள­னவா என்­ப­தை­யும் அறிய தணிக்­கைச் சோதனை முறை­களை சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்­பு­கள் நடத்தி வரு­கின்­றன," என்றாரவர்.