இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமுற்றனர்.
நாட்டிலேயே மின்சார வாகனம் தொடர்பாக நிகழ்ந்துள்ள ஆகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் இது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இவ்வாண்டில் மின்சார ஸ்கூட்டர் தொடர்பாக நிகழ்ந்த தீச்சம்பவங்களில் இதுவும் ஒன்று.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் திங்களன்று இரவு திடீரென தீ மூண்டது.
'ரூபி லாட்ஜ்' என்னும் ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள அந்த விற்பனை நிலையத்தில் அப்போது இருபதுக்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் நேற்றுக் காலை கூறினர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன.
இருப்பினும், ஹோட்டலில் தங்கியிருந்த எட்டுப் பேர் புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். அங்கிருந்த மேலும் 11 பேர் காயங்களுடன் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டது. விற்பனை நிலையத்தில் இருந்த மின்சார ஸ்கூட்டர்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
இறந்தோரில் ஒருவர் பெண். மேலும், சென்னையைச் சேர்ந்த சீதாராம், பாலாஜி என்னும் இருவரும் உயிரிழந்தோரில் அடங்குவர்.
பழுதடைந்த மின்னேற்றியின் காரணமாக தீ மூண்டிருக்கக்
கூடும் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் முழுமையான காரணத்தைக் கண்டறிய புலன்விசாரணை தொடருகிறது.
மின்சார ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தீ கிளம்பியதாக செகந்திராபாத் நகர காவல்துறை அதிகாரி சன்தனா தீப்தி என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மிதமிஞ்சிய மின்னேற்றத்தால் மின்னேற்றி சூடாகி தீப்பிடித்ததா அல்லது வேறெங்காவது தீப்பிடித்து வாகனங்களுக்குப் பரவியதா என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வரு
வதாக அவர் சொன்னார்.
நான்கு மாடிகளைக் கொண்ட ஹோட்டல் முழுவதும் புகை பரவியதால் அங்கிருந்தோரை வெளியேற்ற காவல்துறையினரும் தீயணைப்பாளர்களும் பாரந்தூக்கி
களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஹோட்டல் சன்னல்களிலிருந்து அதிகமான கரும்புகை வெளியேறும் படங்கள் ஊடகங்களின் இணையத்தளங்களில் காணப்பட்டன. சம்பவம் நிகழ்ந்தபோது ஹோட்டலில் 40க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். உயிர்பிழைக்க சிலர் சன்னல்கள் வழியே வெளியே குதித்தனர்.
ஹோட்டலின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்தோரே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் மரணமடைந்தோரில் பெரும்பாலானோர் அந்த இரு மாடிகளில் தங்கி இருந்தவர்கள் என்றம்
ஹைதராபாத் நகரத் தலைமை காவல்துறை அதிகாரி சி.வி. ஆனந்த் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்ப
ங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மின் ஸ்கூட்டர் தீச்சம்பவம் நிகழ்ந் தது. அச்சம்பவத்தில் ஆடவர் ஒரு வரும் அவரது மகளும் உயிரிழந் தனர்.

