அமைச்சர்: குழந்தைப்பருவ தடுப்பூசிப் பட்டியலில் கொவிட்-19 தடுப்பூசியை சேர்க்கும் திட்டமில்லை

அமைச்சர்: குழந்தைப்பருவ தடுப்பூசிப் பட்டியலில் கொவிட்-19 தடுப்பூசியை சேர்க்கும் திட்டமில்லை

3 mins read

கொவிட்-19 தடுப்­பூ­சியை தேசிய குழந்­தைப்­ப­ருவ தடுப்­பூ­சிப் பட்­டி­ய­லில் சேர்க்­கும் திட்­டம் எது­வும் இப்­போ­தைக்கு இல்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நாடாளுமன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்­றுச் சூழல் தொடர்ந்து மாற்­ற­ம­டை­வ­தாக உள்­ளது என்­றும் புதிய தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பரிந்­து­ரை­கள் முன்­வைக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 18 வய­துக்­குட்­பட்ட 100,000 பேரில் 5.7 பேர், கொரோனா தொற்­றி­ய­பின் 'எம்­எஸ்ஐ-சி' எனப்­படும் அரிய, கடு­மை­யான அழற்சி நோய்க்

குறி­யால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 18 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளி­டத்­தில் இந்த பாதிப்பு 100,000 பேருக்கு 38 பேர் என்ற விகி­தத்­தில் இருந்­தது.

இயோ சூ காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங் எழுப்­பிய கேள்­வி­யைத் தொடர்ந்து, அமைச்­சர் ஓங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டார். 12 முதல் 17 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கு 'நோவா­வேக்ஸ்' தடுப்­பூசி போட அனு­ம­திப்­பது குறித்து சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் வல்­லு­நர் குழு­வும் ஆராய்ந்து வரு­கின்­றன என்று அவர் கூறி­னார்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம், 18 வய­தும் அதற்கு மேற்­ப­ட் டோ­ருக்­கும் 'நோவா­வேக்ஸ்' தடுப்­பூசி போட சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அனு­மதி வழங்­கி­யது.

இந்­நி­லை­யில், முத­லில் தோன்­றிய கொவிட்-19 கிரு­மி­யை­யும் பின்­னர் தொடர்ந்த அதன் ஓமிக்­ரான் திரி­பை­யும் எதிர்­கொள்­ள­வல்ல இரு­தி­றன் (bivalent) தடுப்­பூ­சி­கள் சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­படும் என்று அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் உடன்­பாடு செய்­து­கொண்­டுள்­ளது என்­றும் அதற்­கான ஏற்­பா­டு­கள் உறு­தி­செய்­யப்­பட்­ட­பின் கூடு­தல் விவ­ரங்­கள் பகிர்ந்­து­கொள்­ளப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

ஓமிக்­ரான் பிஏ.5 திரிபு உள்­ளிட்ட கொவிட்-19 கிரு­மி­க­ளால் ஏற்­படும் கடு­மை­யான தொற்­றுக்கு எதி­ராக இப்­போ­துள்ள தடுப்­பூ­சி­களே அதி­கப் பாது­காப்பு வழங்கு கின்­றன என்­றும் அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

"ஆத­லால், இன்­னொரு தவணை தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி பெற்­றுள்­ள­வர்­கள், மேலும் தாம­திக்­கா­மல் அத­னைப் போட்­டுக்­கொள்­ளுங்­கள்.

"சமூ­கத்­தில் கொவிட்-19 தொற்று இன்­னும் பரவி வரு­வ­தால் கிரு­மித் திரி­புக்­கேற்ப குறித்த தடுப்­பூ­சி­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்க வேண்­டாம்," என்று பொது­மக்­களை அமைச்­சர் ஓங் கேட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை நீக்­கு­வது குறித்து செங்­காங் குழுத்­தொ­குதி (பாட்­டா­ளிக் கட்சி) உறுப்­பி­னர் ஜேமஸ் லிம் கேள்வி எழுப்பினார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஓங், "இன்­னொரு கொரோனா அலையை எதிர்­பார்ப்­ப­தால் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன என்­றும் அவை நெருக்­கடி நிர்­வா­கத்­தின் ஒரு பகுதி," என்­றார்.

மேலும் அவர் குறிப்­பிடு கையில், "500க்கும் மேற்­பட்­டோர் ஒரே நேரத்­தில் ஒன்­று­கூ­டும் நிகழ்­வு­கள் போன்ற சில குறிப்­பிட்ட சூழ்­நி­லை­களில் தடுப்­பூசி அடிப் படை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­முறை அவ­சி­ய­மா­கிறது.

"இருப்பினும் முகக்­க­வ­சத்தைக் கட்டாயப்படுத்துவது போன்ற நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்க வலி­யு­றுத்­து­வ­தில் முத­லா­ளி­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் நீக்­குப்­போக்கு உள்­ளது.

"தடுப்­பூ­சித் தேவை­கள் குறித்து அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்­யும்­போது, தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் குறித்­தும் ஆரா­யப்­படும்," என்­றார் திரு ஓங்.

அடுத்த சில மாதங்­க­ளுக்­குள் இந்த மறு­ஆய்வு நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நடைமுறைகளை பொதுத் துறையினருக்கு முழுமையாக நீக்கு வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்குமா என்று திரு லிம் கேட்டபோது, முதி யோர் உள்ளார்களா, கூட்டம் கூடு கிறதா என்று வெவ்வேறு சூழ்நிலை கள் எதிர்பார்க்கப்படுவதால் அவ் வாறு செய்வது கடினம் என்றார் அமைச்சர் ஓங்.