இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் சிங்கப்பூர் பெண்

இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் சிங்கப்பூர் பெண்

1 mins read
98e64669-ff92-4496-b231-2b2ed86cfcfe
இங்கிலிஷ் கால்வாயைக் கடப்பதற்காக 15 நாள்களுக்கு ஒருமுறை 13 டிகிரி செல்சியஸ் வெப்்பநிலையில் உள்ள நீரில் 35 கிலோ மீட்டர் நீந்திப் பயிற்சி மேற்கொண்டதாகக் கூறினார் லி லிங் யுங். படம்: லி லிங் யுங் -
multi-img1 of 2

லி லிங் யுங், 37, இங்­கி­லிஷ் கால்­வாயை நீந்­திக் கடந்த முதல் சிங்­கப்­பூர்ப் பெண் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளார்.

இங்­கி­லாந்­தின் டோவர் நக­ருக்கு அருகே உள்ள சாம்­ஃபியர் ஹோ எனும் இடத்­தி­லி­ருந்து, சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்­குப் பிறகு 1 மணிக்கு அவர் இந்­தச் சாதனை நீச்­ச­லைத் தொடங்­கி­னார்.

கும்­மி­ருட்­டில் 19 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நி­லை­யில் அடுத்த 12 மணி நேரம் 54 நிமி­டங்­க­ளுக்கு நீந்­திய அவர் பிரான்­சின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள கிரிஸ் நெஸ் முனை­யில் கரை­யே­றி­னர். லி லிங் யுங் நீந்­திக் கடந்த தொலைவு 34 கிலோ­ மீட்­டர்­கள்.

நீச்சலின்போது அவ­ரது கண­வ­ரும் நீச்­சல் பயிற்­று­விப்­பா­ள­ரும் ஒரு பட­கில் அவ­ரைத் தொடர்ந்­த­னர்.

கடந்த ஈராண்­டாக இந்­தச் சாத­னையை நிகழ்த்­து­வ­தற்­கா­கக் கடும் பயிற்சி மேற்­கொண்­ட­தா­கக் கூறி­னார் லி லிங் யுங். பருவ நிலை­யால் இடை­யில் நீந்­தும் பாதை சற்றே மாறி­ய­போ­தும் மனம் தள­ரா­மல் இலக்கை எட்­டிய அனு­ப­வத்தை அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூர் வர­லாற்­றா­ள­ரான தம் பிங் ஜின், 2005ஆம் ஆண்டு இங்­கி­லிஷ் கால்­வாயை நீந்­திக் கடந்த முதல் சிங்­கப்­பூ­ரர் ஆவார்.