'அரிசி விநியோகம் தடைபடவில்லை'

'அரிசி விநியோகம் தடைபடவில்லை'

2 mins read

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு அரி­சியை இறக்­கு­மதி செய்­வ­தில் இது­வரை குறிப்­பி­டத்­தக்க அள­வில் இடை­யூறு ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்று இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். வியட்­னாம், தாய்­லாந்து ஆகிய நாடு­களில் இருந்து அரி­சி­யைத் தரு­விப்­ப­தி­லும் சிக்­கல் ஏது­மில்லை என்று கூறப்­பட்­டது.

அத்­து­டன் விநி­யோ­கத் தடை அல்­லது விலை­யேற்­றம் ஆகி­ய­வற்­றின் பாதிப்­பு­க­ளைத் தணிப்­ப­தில் நாட்­டின் அரிசி கையி­ருப்­புத் திட்­டம் உத­வி­ய­தாக வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­தது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­விக்கு அது பதி­ல­ளித்­தது.

இந்­தியா அண்­மை­யில் தீட்­டாத அரிசி, பழுப்பு நிற அரிசி ஆகி­ய­வற்­றுக்­கான ஏற்­று­ம­திக்கு 20 விழுக்­காடு வரி விதித்­தது; குருணை அரிசி ஏற்­று­ம­தி­யைத் தடை செய்­தது. ஆனால் சிங்­கப்­பூ­ரில் அத்­த­கைய அரி­சி­யின் பயன்­பாடு மிக­வும் குறைவு என்று அமைச்சு கூறி­யது.

அர­சாங்­கம் நிலை­மை­யைத் தொடர்ந்து கண்­கா­ணித்து சிங்­கப்­பூ­ருக்கு அரிசி விநி­யோ­கம் போதிய அள­வில் இருப்­பதை உறுதி­செய்­யும் என்று அது குறிப்­பிட்­டது.

அரிசி கையி­ருப்­புத் திட்­டத்­தின்­கீழ், இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் தங்­கள் சராசரி மாதாந்­தர இறக்­கு­மதி அள­வைப்­போல இரு மடங்கு அரி­சி­யைக் கையி­ருப்­பில் வைத்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிங் யோம் ஜூலை மாதத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஷெங் சியோங் பேரங்­காடி 'ஹவுஸ்' வணிக முத்­திரை கொண்ட அரி­சி­யின் விலை­யைக் குறு­கிய காலத்­திற்கு ஏற்­றப்­போ­வ­தில்லை என்று கூறி­யி­ருக்­கிறது. ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி அதன் அரி­சிப் பொருள்­க­ளின் விலை நிலை­யாக இருக்­கும் என்று கூறி­யுள்­ளது.

ஆனால் இந்­தி­யா­வின் நட­வ­டிக்­கை­யால் அரிசி விலை அதி­க­ரிக்­கும் என்று சில வர்த்­த­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

முஸ்­தஃபா செண்­டர் அதன் ஆக அண்­மைக் கொள்­மு­தல் இங்கு வந்து சேர்ந்­த­வு­டன் அரிசி சார்ந்த பொருள்­க­ளின் விலை 20 விழுக்­காடு உயர்த்­தப்­படும் என்று கூறி­யுள்­ளது.

அரிசி விநி­யோ­கத்­தில் சிக்­கல் இல்லை என்­றும் விலை மட்­டும்­தான் பாதிக்­கப்­படும் என்­றும் அது குறிப்­பிட்­டது.

சென்னை டிரே­டிங் அண்ட் சூப்­பர்­மார்க்­கெட் நிறு­வ­னம், அத­னி­டம் அதிக அள­வில் பொருள் வாங்­கும் வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லோர் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு சமைத்­துத் தரு­ப­வர்­கள் என்­றும் அவர்­கள் இப்­போது தயக்­கம் காட்­டு­வ­தா­க­வும் கூறி­யது.

நிறு­வ­னம் பாஸ்­மதி ரக அரி­சி­யைத் தவிர்த்து மற்ற அனைத்து ரக அரி­சி­யின் விலை­யும் அதி­க­ரிக்­கும் என்று கூறி­யது. நேற்று முதல் 25 கிலோ­கி­ராம் அரிசி மூட்­டை­யின் விலையை அது ஐந்து வெள்ளி கூட்­டி­யது.

கேட்­ட­ரிங் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னம், சமைத்த உண­வின் விலையை படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­க­வி­ருப்­ப­தா­கக் கூறி­யது.

ஒரு நாளைக்கு ஐந்து டன் அரி­சி­யைப் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு சமைக்­கும் இந்­நி­று­வ­னம் அண்­மை­யில் மலே­சிய கோழி ஏற்­று­ம­தித் தடை­யின்­போது உணவு விலையை அதி­க­ரித்­தது.