பத்து பகாட்டில் வெள்ளம்; ஏராளமானோர் வெளியேற்றம்

பத்து பகாட்டில் வெள்ளம்; ஏராளமானோர் வெளியேற்றம்

1 mins read
660c53ed-e64c-4cd7-8bff-952790747057
பத்து பகாட் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஏறக்குறைய நான்கு மணி நேரத்துக்கு கனமழை பெய்தது. படம்: டுவிட்டர் -

பத்து பகாட்: மலேசியாவின் ஸ்ரீ காடிங் வட்­டா­ரத்­தின் சில பகு­தி­களில் நேற்­றுக் காலை திடீர் வெள்­ளம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து மொத்­தம் 600 குடி­யி­ருப்­பா­ளர்­கள் தற்­கா­லிக நிவா­ரண நிலை­யங்­க­ளுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஏறக்­குறைய 190 குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். நேற்று நள்­ளி­ர­வுக்­குப் பிறகு 1.30 மணி­யில் இருந்து அதி­காலை 5.30 மணி வரை கன­மழை கொட்­டித் தீர்த்­த­தில் சாலை­களில் நீர்­மட்­டம் தொடர்ந்து அதி­க­ரித்து வந்­த­தாக பத்து பகாட் மாவட்ட காவல்­து­றைத் தலை­வர் இஸ்­மா­யில் டோலா கூறி­னார்.

தாமான் ஸ்ரீ பஞ்­சோர், கம்­போங் செங்­கு­வாங், கம்­போங் பாரு ஸ்ரீ காடிங், பெக்­கான் ஸ்ரீ காடிங் ஆகிய நான்கு பகு­தி­களும் திடீர் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

முத­லில் ஒரு பள்ளி, தற்­கா­லிக நிவா­ரண நிலை­ய­மாக மாற்­றப்­பட்­ட­தா­க­வும் பின்­னர் அங்­கும் வெள்­ளம் ஏற்­ப­டவே பாதிக்­கப்­பட்­டோர் அனை­வ­ரும் வேறொரு தற்­கா­லிக முகா­முக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்ட மேலும் சில­ரைப் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யேற்­றும் பணி தொடர்­கிறது.

காவல்­து­றை­யு­டன் மலே­சி­யத் தீய­ணைப்பு, மீட்­புத் துறை, குடி­மைத் தற்­காப்­புப் படை, சமூக நலத்­துறை, மாவட்­டச் சுகா­தார நிலை­யம் ஆகி­ய­வை­யும் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­ன.

மோச­மான பாதிப்பை எதிர்்­கொள்ள அர­சாங்­கம் தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­கப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் உறு­தி­ய­ளித்­துள்­ளார். நாடு முழு­வ­தும் 6,000க்கும் மேற்­பட்ட தற்­கா­லி­கத் தங்­கு­மி­டங்­கள் அமைக்­கப்­படும். இவற்­றில் ஒரு மில்­லி­யன் பேர் வரை தங்க முடி­யும் என்றார் அவர்.