தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீ மூண்டது: 141 பயணிகளும் உயிர் தப்பினர்

1 mins read
070ac168-7f8e-4828-b18e-3f22223992cd
மஸ்கட் அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இயந்திரத்தில் இருந்து புகை கிளம்பியது. படம்: இணையம் -

ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் லிமிடெட் நிறு­வ­னத்­தின் போயிங் 737-800 விமா­னம் ஓமான் தலை­ந­கர் மஸ்­கட்­டில் இருந்து மேலே கிளம்ப ஆயத்­த­மா­ன­போது அதன் ஓர் இயந்­திரத்தில் தீ கிளம்பியது.

இத­னால் அந்த விமா­னத்­தில் இருந்த 100க்கும் மேற்­பட்ட பய­ணிகள் உட­ன­டி­யாக விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டனர்.

எல்­லா­ரும் பத்­தி­ர­மாக தரை­யிறங்­கி­ய­தாக இந்­தி­யா­வின் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கத்­தின் தலை­வர் அருண்­கு­மார் கூறி­னார். இந்த இயக்­கு­ந­ர­கம் சம்­ப­வம் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கிறது என்­றும் குறுஞ்­செய்­தி­யில் அவர் தெரி­வித்­தார்.

கொச்சி நக­ருக்­குப் புறப்­பட்ட அந்த விமா­னத்­தில் 141 பய­ணி­கள் இருந்­த­னர். அது மஸ்­கட்­டில் இருந்து உள்­ளூர் நேரப்­படி காலை 11.20க்கு புறப்­ப­ட­வி­ருந்­தது என்று ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அந்த விமா­னத்­தின் ஓர் இயந்­தி­ரத்­தில் இருந்து புகை கிளம்­பியதை மற்­றொரு விமா­னத்­தில் இருந்த ஊழி­யர்­கள் பார்த்­த­தாக அது மேலும் தெரி­வித்­தது.

சில பயணிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் யாரும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறின.