மோடி: இது போருக்கான காலமல்ல

உஸ்­பெக்­கிஸ்­தா­னின் சமர்­காண்ட் நக­ரில் நடை­பெ­ற்ற ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு உச்சநிலை மாநாட்­டிற்­கி­டையே இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னைச் சந்­தித்­துப் பேசி­னார்.

ரஷ்யா, உக்­ரேன்­மீது போர் தொடுத்­த­தற்­குப் பிறகு இரு தலை­வர்­களும் சந்­திப்­பது இதுவே முதல்­முறை.

சந்­திப்­பில் இரு­த­ரப்பு, வட்­டார, உலக விவ­கா­ரங்­கள் குறித்­துப் பிர­த­மர் மோடி­யும் அதி­பர் புட்­டி­னும் கலந்­து­ரை­யா­டி­னர்.

இது போருக்­கான காலமல்ல என்று திரு மோடி ரஷ்ய அதி­ப­ரி­டம் வலி­யு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது. உலக நாடு­கள் கவலை தெரி­வித்­துள்ள உணவு, உரம், எரி­பொ­ருள் பாது­காப்பு உள்­ளிட்ட முக்­கிய அம்­சங்­கள் குறித்­தும் திரு புட்­டி­னி­டம் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

இந்­திய-ரஷ்ய உற­வு­கள் குறித்­துத் தொலை­பே­சி­யில் தாங்­கள் சில­முறை உரை­யா­டி­ய­தைக் குறிப்­பிட்ட திரு மோடி, போர் நடை­பெற்ற சூழ­லில் ரஷ்­யா­வி­லும் உக்­ரே­னி­லும் படித்­துக்­கொண்­டி­ருந்த இந்­திய மாண­வர்­கள் தாய­கம் திரும்ப உத­வி­ய­தற்­காக இரு நாடு­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொண்­ட­தா­க­வும் ஊட­கங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­புக்­கான சுழற்­சி­முறை தலை­மைத்­து­வத்தை உஸ்­பெக்­கிஸ்­தான் இந்­தி­யா­வி­டம் நேற்று ஒப்­ப­டைத்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!