ஸ்டார்பக்ஸ் சிங்கப்பூர் தகவல் கசிவு; 200,000 பேர் பாதிப்பு

ஸ்டார்பக்ஸ் சிங்கப்பூர் தகவல் கசிவு; 200,000 பேர் பாதிப்பு

1 mins read

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் ஸ்டார்­பக்ஸ் நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர்­கள் 200,000 பேரின் தனிப்­பட்ட தக­வல்­கள் கசிந்­துள்­ளன. இவை இம்­மா­தம் 10ஆம் தேதி­யில் இருந்து இணை­யத்­தில் விற்­கப்­பட்­ட­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பெயர், வீட்டு முக­வரி, மின்­னஞ்­சல் முக­வரி உள்­ளிட்ட தக­வல்­கள் இணை­யத்­தில் திரு­டப்­பட்­ட­தாக நிறு­வ­னம் அவர்­க­ளுக்கு மின்­னஞ்­சல் மூலம் தெரி­வித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும் வாடிக்­கை­யா­ளர்­களின் கடன் பற்று அட்டை விவ­ரங்­கள் திருடு போக­வில்லை என்­பதை அந்த மின்­னஞ்­சல் குறிப்­பிட்­டது. நிறு­வ­னம் அந்த விவ­ரங்­க­ளைப் பதி­வு­செய்து வைத்­துக்­கொள்­வ­தில்லை என்­பதை அது சுட்­டி­யது.

தக­வல் கசிவு குறித்து இம்­மா­தம் 13ஆம் தேதி தெரி­ய­வந்­த­தாக ஸ்டார்­பக்ஸ் நிறு­வ­னப் பேச்­சா­ளர் கூறி­னார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தக­வல்­களைப் பாது­காக்­கும் பொருட்டு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறிய அவர், இதன் தொடர்­பில் அதி­கா­ரி­க­ளு­டன் நிறு­வ­னம் முழு­மை­யாக ஒத்­து­ழைத்து வரு­வ­தா­கச் சொன்­னார்.

கசிந்த தக­வல்­கள் இணை­யத்­தில் விற்­கப்­பட்­டுள்­ளன. தக­வல் தர­வின் ஒரு பிரதி 3,500 வெள்­ளிக்கு விற்­ப­னை­யா­ன­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் நான்கு பிரதி களுக்­கான விற்­பனை குறித்த தக­வல்­கள் இணை­யத்­தில் காணப்­படு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் அடுத்த சில வாரங்­களில் மோசடி முயற்­சி­க­ளுக்கு இலக்­கா­கக்­கூ­டும் என்­ப­தால் அது­கு­றித்து விழிப்­பு­டன் இருக்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.