நமீபியாவிலிருந்து இந்தியா வந்துசேர்ந்த எட்டு சிறுத்தைகள்

1 mins read
4ff4b8c1-483f-467a-a884-082ed23d5149
குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையைப் பார்வையிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: இபிஏ -

ஆப்­பி­ரிக்க நாடான நமீ­பி­யா­வி­ல் இருந்து நேற்று எட்டு சிறுத்­தை­கள் இந்­தியா வந்­து­சேர்ந்­தன. இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தமது 72வது பிறந்­த­நா­ளில், மத்­திய பிர­தே­சத்­தில் உள்ள குனோ தேசிய பூங்­கா­விற்­குள் அச்­சி­றுத்­தை­களை விடு­வித்­தார்.

1948ல் இந்­தி­யா­வின் கடைசி சிறுத்தை இறந்­தது. அதன் பிறகு நாட்­டில் சிறுத்தை இனம் அழிந்­து­விட்­ட­தாக 1952ல் அறி­விக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வில் மீண்டும் சிறுத்தை இனத்­தைப் பெருக்­கும் நோக்­கில் நமீ­பி­யா­வி­லி­ருந்து ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்­தை­கள் இந்தி­யா­வுக்­கு இப்போது கொண்­டு­வரப்பட்டுள்ளன.

இவற்­றைக் கொண்­டு­வந்த போயிங் சிறப்பு விமா­னம், மத்திய பிர­தே­சம், குவா­லி­யர் மாவட்­டத்­தில் உள்ள ஆகா­யப் படைத்­த­ளத்­தில் நேற்­றுக் காலை தரை­யி­றங்­கி­யது. அதன் பின்னர் ஹெலி­காப்­ட­ரில் இவை குனோ தேசிய பூங்­கா­விற்குக் கொண்டு­செல்­லப்­பட்­டன.

குனோ தேசிய பூங்­கா­வில் கூண்­டி­லி­ருந்து சிறுத்­தை­களை விடு­வித்த பின்­னர் பேசிய பிர­த­மர் மோடி, "இந்­தி­யா­வுக்கு சிறுத்­தை­களை அனுப்பிய நமீ­பி­யா அர­சுக்கு நன்றி. தற்­போது இவை இந்­தியா வந்­துள்­ளது வர­லாற்றுச் சிறப்­பு­மிக்­க­தா­கும். காட்டு வளத்தை இவை அதி­க­ரிக்கச் செய்­யும்.

"கிட்டத்தட்ட 75 ஆண்­டு­களுக்கு முன்­ன­தாக அழிந்­து­போன இந்த இனம் மீண்­டும் இந்­திய மண்­ணுக்கு திரும்பி வந்­துள்­ளது. இந்தச் சிறுத்­தை­க­ளைப் பார்­வை­யிட சுற்றுப்­பயணி­கள் சிறி­து­கா­லம் காத்து இ­ருக்க வேண்­டும்," என்று கூறி­னார்.