திடீர் வெள்ள எச்சரிக்கை: உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதி மூடப்பட்டது

திடீர் வெள்ள எச்சரிக்கை: உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதி மூடப்பட்டது

2 mins read
e7969253-e41f-4574-a373-c46f11153393
நேற்று பெய்த கடும் மழை காரண மாக சுங்கை உலு பாண்டான் கால்வாயில் இருந்து தண்ணீர் கிளமெண்டி நிலச்சரிவு நிகழ்ந்த இடம் வழியாக ஓடுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலு பாண்­டான் கால்­வா­யில் நீர் மட்­டம் நேற்று கரை­யைத் தொடும் அள­வுக்கு உயர்ந்­ததை அடுத்து கிம் மோவில் உள்ள உலு பாண்­டான் பூங்கா இணைப்­புப் பாதைப் பகுதி மூடப்­பட்­டது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் நேற்­றுக் காலை 9.50 மணிக்கு வெள்ள எச்­ச­ரிக்­கையை விடுத்­தது. அந்­தக் கால்­வா­யில் வெள்ள நீரின் அளவு அதன் கொள்­ள­ள­வில் 90 விழுக்­காட்டைத் தொட்­டு­விட்­ட­தாக கழகம் தெரி­வித்து இருந்­தது.

தேசிய பூங்­காக் கழ­க­மும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கமும் தண்ணீர் மட்­டத்தை அணுக்­க­மாகக் கண்­கா­ணிக்­கப் போவ­தா­க­வும் தேவை எனில் பூங்கா இணைப்­புப் பாதைப் பகு­தியை மூடப்­போ­வ­தா­க­வும் பூங்­காக் கழ­கத்­தின் இணை­யத்­த­ளத்­தில் தெரி­வித்து இருந்தன.

அந்­தப் பூங்கா இணைப்­புப் பாதைப் பகுதி நேற்று பிற்­ப­கல் நேரத்­தில் திறக்­கப்­பட்டு இருந்­தது.

செப்­டம்­பர் 2ஆம் தேதி நிலச்­சரிவு ஏற்­பட்­டதை அடுத்து அந்­தக் கால்­வா­யில் மண் சரிந்­து­விட்­டது.

அதை­ய­டுத்து அடுத்த நாளன்று தண்­ணீர் தேங்­கா­மல் இருக்க நீர்­வழிப் பாதை ஒன்று அங்கு அமைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வரும் வாரங்­களில் மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருக்­கிறது.

மழை கார­ண­மாக அந்­தக் கால்­வா­யில் கலக்­கும் நீர் விரை­வில் ஓடி வெள்­ளம் ஏற்­படும் ஆபத்தைத் தவிர்க்க அந்த நீர்­வ­ழிப் பாதை உத­வும்.

நிலச்­ச­ரி­வால் ஏற்­பட்ட சேதத்தைச் சரி­செய்ய இடம்­பெ­றும் கட்­டு­மா­னப் பணி­கள் முடி­வ­டைய ஓரிரு மாதங்­கள் ஆக­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

காமன்­வெல்த் அவென்யூ வெஸ்ட் மேம்­பா­லச் சாலை­யில் இருந்து கிள­மெண்டி ரோடு வரை செல்­லும் பூங்கா இணைப்­புப் பாதைப் பகுதி தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்டு இருக்­கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.