தைவானில் மீண்டும் நிலநடுக்கம்; கட்டடம் இடிந்தது; பலர் மீட்பு

தைவானில் மீண்டும் நிலநடுக்கம்; கட்டடம் இடிந்தது; பலர் மீட்பு

1 mins read
fb6ec21e-9217-4eb5-a909-821815bb4fe9
தைவானில் ஹுவாலியன் என்ற பகுதியில் உள்ள யூலி என்ற நகரில் நிலநடுக்கம் காரணமாக கட்டடம் இடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

தைவா­னின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் இருக்­கும் தாய்­துங் என்ற வட்­டா­ரத்­தில் சனிக்­கி­ழமை 6.4 ரிக்­டர் அள­வி­லான நில­ ந­டுக்­கம் ஏற்­பட்­டது.

அதில் உயி­ரு­டற்சேதம் இல்லை. என்­றாலும் நேற்று அதே பகு­தி­யில் 6.8 ரிக்­டர் நில­ந­டுக்­கம் நிகழ்ந்­த­தாக தைவா­னின் பரு­வ­நிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

அத­னால் டோங்லி என்ற ரயில் நிலை­யத்­தின் நடை­மேடை இடிந்­த­தால் ரயில் பெட்­டி­கள் புரண்­டன. யூலி என்ற நக­ரில் ஒரு கடை இடிந்து விழுந்­தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலை அடி­வா­ரம் ஒன்­றில் பலர் மாட்­டிக்கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஐந்து பேர் மீட்­கப்­பட்­டு­விட்­ட­தாகவும் தேடி மீட்கும் பணி தொடர்வதாகவும் தீயணைப்­புத் துறை தெரி­வித்­தது.