சுய உதவிக் குழுக்கள் இன்னமும் உயிர்நாடி

சுய உதவிக் குழுக்கள் இன்னமும் உயிர்நாடி

3 mins read

பிரதமர்: குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவ பொருத்தமானவை

இன அடிப்­ப­டை­யி­லான சுய உத­விக் குழுக்­கள், குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு உத­வு­வ­தில் இன்­ன­மும் முக்கி­ய­மான ஏற்­பா­டாக இருக்­கின்­றன என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

தாங்­கள் சேவை­யாற்­றும் மக்­க­ளுக்­குப் பொருத்­த­மான செயல்­திட்­டங்­களை வடி­வ­மைக்க அந்­தக் குழுக்­க­ளால் இயலும் என்­பதை பிரதமர் சுட்­டிக்­காட்டி­னார். சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றத்­தின் 30வது ஆண்­டை­யொட்டி நேற்று பொது வர­வேற்பு நிகழ்ச்சி நடந்­தது.

அதில் கலந்­து­கொண்டு திரு லீ உரை­யாற்­றி­னார்.

சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், மெண்­டாக்கி, யுரே­ஷி­யர் சங்­கம் ஆகி­யவையும் உள்­ளிட்ட சுய உத­விக் குழுக்­கள் சிங்­கப்­பூ­ரின் பல இன சமூ­கத்­தில் இன்­ன­மும் பொருத்­த­மா­ன­வை­யாக இருப்பது ஏன் என்று மக்­கள் அப்­போ­தைக்கு அப்­போது கேட்­கிறார்­கள் என்­பதைச் சுட்­டிக்­காட்டிய பிர­த­மர், சுய உத­விக் குழுக்­க­ளுக்­கான அவ­சி­யத்தை விளக்­கி­னார்.

"இனம் பாரா­மல் குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளுக்கு அர­சாங்­கம் உத­வி­களை வழங்­கு­கிறது. அதே­வே­ளை­யில், சுய உத­விக் குழுக்­கள் கூடு­த­லான உதவி­களை வழங்க முடி­யும்.

"அதோடு மட்­டு­மின்றி இன, சமய உணர்­வு­பூர்­வ­மான நெருடல்கள் எதுவு மின்றி பிரச்­சி­னை­க­ளுக்கு அவை தீர்வு காண முடி­யும்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

சுய உத­விக் குழுக்­க­ளுக்கு அர­சாங்கம் நிதி­யு­தவி வழங்­கு­கிறது. அந்த அமைப்­பு­க­ளுக்கு ஒவ்­வொரு மாத­மும் ஊழி­யர்­கள் 50 காசு முதல் $3 வரை வழங்­கு­கி­றார்­கள்.

வச­தி­யான சிங்­கப்­பூ­ரர்­களில் அதி­க­மா­னோர், தங்­க­ளு­டைய சொந்த சமூ­கங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க உத­வக்­கூ­டிய ஓர் ஏற்­பா­டா­க­வும் சுய உத­விக் குழுக்­கள் திகழ்­கின்­றன என்று அவர் கூறினார்.

தஞ்­சோங் காத்­தோங்­கில் உள்ள சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றத்­தின் தலை­மை­யகத்­தில் நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் திரு லீ உரை­யாற்­றினார்.

அந்த நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் இதர நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டார்­கள். அதில் சிறப்பு விருந்­தி­ன­ராக திரு லீ கலந்துகொண்டார்.

"சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மேலும் வளர்ந்த நிலையை எட்­டு­கிறது. பொரு­ளி­யல் வளர்ச்­சியைச் சாதிப்­பது என்பது முன்­பை­விட கடி­ன­மாக இருக்கும்.

"சமூக முன்னேற்றத்தைக் கட்டிக்காப் பது இன்னும் சிரமமானதாக இருக்கும். இந்த இலக்குகளைச் சாதிக்க நாம் மேலும் பாடுபடவேண்டி இருக்கும். இதில் சுய உதவிக் குழுக்கள் நமக்கு உதவும்," என்று அவர் கூறினார்.

பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் நேற்று கிட்­டத்­தட்ட பொது­மக்­கள் 650 பேர் கலந்­து­கொண்­ட­னர். மழை பெய்­தா­லும்­கூட அங்கு பல நிகழ்ச்­சி­க­ளி­லும் கலந்து­கொண்டு அவர்­கள் மகிழ்ந்­த­னர்.

"சுய உத­விக் குழு மிக­வும் இயற்கை­யான மனித மன உந்­து­தல். அது சமூக உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யில் பிணைப்பை வலுப்­ப­டுத்­து­கிறது. சுய­சார்பு உணர்வை பலப்­ப­டுத்­து­கிறது. சமூ­கத்­தில் பெரு­மை கொள்ளச் செய்கிறது.

"இவை எல்­லாம் சிங்­கப்­பூ­ரின் தனித்­தன்­மைக்கு உறு­து­ணை­யா­கத் திகழ்­கின்­றன," என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம் செய்து வரும் பணி­களை, அளித்து வரும் ஆத­ர­வை, அதன் செயல்­திட்­டங்களை நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்த மன்­றம் கிட்­டத்­தட்ட 18,000 குடும்­பங்­க­ளுக்கு நன்மை அளிக்­கிறது. கடந்த 1992ல் தோற்­று­விக்­கப்­பட்ட அந்த மன்­றம், குறைந்த வரு­மானக் குடும்­பங்களுக்கு நிதி­யு­தவி அளிக்­கிறது;

துணைப்­பாட செயல்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கிறது; மதி­யுரை ஆதரவை வழங்கு­கிறது.

அந்த மன்­றத்­தின் செயல்­திட்­டங்­கள், ஆத­ரவுத் திட்­டங்­கள் மூலம் சென்ற ஆண்­டில் 17,700 குடும்­பங்­கள் நன்­மை­யடைந்து இருக்­கின்­றன.

இந்த எண்­ணிக்கை 2020ஆம் ஆண்டில் பல­ன­டைந்த குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட கொஞ்­சம் குறைவு. 2019ல் பல­ன­டைந்த குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட கொஞ்­சம் அதிகம் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம் இந்த ஆண்­டில் 5,000 மாண­வர்­க­ளுக்குப் பாட வகுப்­பு­களை நடத்­து­கிறது. சிங்­கப்­பூர் சீன குல­வ­ழிச் சங்­கங்­கள் கூட்­ட­மைப்­பு­டன் சேர்ந்து அது மாணவர்களுக்குப் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளங்­களை வழங்கி வரு­கிறது.

7,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் படிப்­பைத் தொடர கிட்­டத்­தட்ட $3 மில்­லி­யனை அது செல­விட்டு இருக்­கிறது.

அந்த மன்­றம் அடுத்த ஆண்­டில் மேலும் பல செயல்­திட்­டங்­க­ளைச் செயல்­படுத்­தும் என்று அதன் நிர்­வாக இயக்கு­நர் டான் யாப் கின் நேற்று ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

வாரந்­தோ­றும் விளை­யாட்டு அடிப்­படை­யில் 100 மாண­வர்­கள் கல்வி கற்க ஏற்­பாடு செய்­யப்­படும் செயல்­திட்­டம் அவற்­றில் அடங்­கும்.