இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதுடெல்லியில் சந்திப்பு பல்வேறு புதிய துறைகளில் ஒத்துழைப்பு

2 mins read
57334cfe-903d-4f70-b7db-e69e7f771cac
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தினார். அவர்களுடன் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சூரிய எரி­சக்தி, பசுமை ஹைட்ரோஜன் வாயு, நிதித் தொழில்­நுட்­பம், தக­வல் தர­வு­கள் உள்­ளிட்ட புதிய அம்­சங்­களில் ஒத்­து­ழைப்­பது பற்றி சிங்­கப்­பூர் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்கும் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடியும் நேற்று பேச்சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னர்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், இரு­நாட்டு ஒத்­து­ழைப்பை அதி­க­ரிக்­கும் நோக்­கில் இந்­தி­யா­வுக்கு ஐந்­து­நாள் பய­ணம் சென்­றுள்­ளார்.

தலை­ந­கர் புது­டெல்­லி­யில் திரு வோங், நேற்று இந்­தி­யப் பிர­த­ம­ரைச் சந்­தித்­தார். வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் இந்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னும் அப்­போது உட­னி­ருந்­தார்.

அச்­சந்­திப்பு பற்றி தமது சமூக ஊட­கப் பக்­கங்­களில் பதி­விட்ட திரு வோங், இந்­தியா பல்­வேறு துறை­களில் சிங்­கப்­பூ­ரின் உத்­தி­பூர்வ பங்­காளி நாடு என்று குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் ஓய்ந்துவரும் வேளை­யில் இரு ­த­ரப்­புத் தொடர்­பு­கள் வேகம் எடுத்து அதி­க­ரித்து வரு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

இரு நாடுகளின் இளம் திற­னா­ளர்­களை ஊக்­கு­விக்க, சிங்­கப்­பூர்-இந்­திய 'ஹேக்­கத்­தோன்' போட்­டியை மீண்­டும் தொடங்­கு­வதை எதிர்ப்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தாக திரு வோங் குறிப்­பிட்­டார். பெருந்­தொற்றுக் கார­ண­மாக அந்­தப் போட்டி இரண்டு ஆண்டு களாக நடை­பெ­ற­வில்லை.

கடந்த 2018ஆம் ஆண்­டி­லும் 2019ஆம் ஆண்­டி­லும் 'ஹேக்­கத்­தான்' போட்டி நடை­பெற்­றது.

இரு நாட்டு மாண­வர்­க­ளைக் கொண்ட அணி­கள், கல்வி, பசு­மைத் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட கருப்­பொ­ருள்­களில் மென் பொருள் திட்­டங்­களை உரு­வாக்­கி­னர்.

சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் அணுக்­க­மான பொரு­ளி­யல், அர­சி­யல், கலா­சார உற­வைக் கொண்­டுள்­ளன. இந்­தி­யா­வுக்­கும் ஆசி­யா­னுக்­கும் இடையே மேலும் நெருக்­க­மான உறவை சிங்­கப்­பூர் ஊக்­கு­வித்து வரு­கிறது.

தமது பய­ணத்­தின் ஒரு பகுதி­ யாக திரு வோங் நேற்றுமுன்­தினம் குஜ­ராத் மாநி­லத்­துக்­குச் சென்று அதன் முத­ல­மைச்­சர் பூபேந்­திர பட்­டே­லைச் சந்­தித்­தார்.

குஜ­ராத்­துக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் உள்ள அணுக்கமான உறவை சுட்­டிக்­காட்­டிய திரு வோங், நிதித் தொழில்­நுட்­பம் போன்ற புதிய துறை­களில் இருதரப்­பும் ஒத்­து­ழைக்க வாய்ப்­புள்­ளது என்­றார்.