கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஒரே தடுப்பூசி

கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஒரே தடுப்பூசி

1 mins read
32b5baae-3839-4c2d-b5cf-ecbeb9a7a934
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஒரே தடுப்பூசி 2023ஆம் ஆண்டு இறுதியில் தயாராகலாம் என்று அமெரிக்காவின் மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசிக்கான முதற்கட்ட சோதனைகளைத் தற்போது நடத்தி வருவதாக மொடர்னா தெரிவித்தது.

எம்ஆர்என்ஏ முறையில் தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்துகொள்ள வகைசெய்யும் நீக்குப்போக்குத் தன்மை உள்ளது.

அதனால் இரு வகை கிருமிகளுக்கான ஒரே தடுப்பூசியை விரைவில் உருவாக்கமுடியும் என்று மொடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி பால் பர்ட்டன் கூறினார்.